புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

கூட்டங்களில் தகுதியான தலைவர்கள் இல்லையா?

Wigneswaranமாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் முதலமைச்சர் மற்றும் ஒரு சிரேஸ்ட அமைச்சர் ஆகியோர் மட்டுமே இணை தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது அரசு தனது தேவை கருதி பல அரசியல்வாதிகளை இணை தலைவர்களாக நியமித்துள்ளதால் கூட்டங்கள் தடைப்பட தொடங்கியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலப்பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஒருவரும் இணை தலைவர்களாக இருப்பார்கள். அந்த நடைமுறை தொடர்ந்துவந்த நிலையில் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அது மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இணை தலை வர்களாக வேறு சில அரசியல்வாதிகளும் இணைக்கப்பட்டார்கள். நான் ஜனாதிபதியை சந்தித்தபோது சில அரசியல் நலன்களுக்காக இவ்வாறு செய்துள்ளீர்கள். ஆனால் பல்வேறு சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.
இவ்வாறு பல அரசியல்வாதிகள் இணை தலைவர்களாக நியமிக்கப்பட்டிருப்பதால் கூட்டத்தில் பேச வேண்டிய விடயங்களை கூட அவர்கள் இணை தலைவர் ஆசனத்திலிருந்து பேசி கொண்டிருக்கின்றார்கள்.
இப்போது மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான திகதிகள் ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 34 பிரதேச செயலகங்கள் மற்றும் 5 மாவட்ட செயலகங்கள் என 39 ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு நான் செல்ல  வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. இவ்வாறான நிலை மாற்றப்படாவிட்டால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் நினைவேறாமல் போகும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசு கூட்டமைப்பினை திருப்திப்படுத்த அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மற்றொரு புறம் கட்சி சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்தலைவர்களாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2