சுழிபுரத்தில் காலாவதியான பொருட்கள் விற்பனை - வர்தகருக்கு 40 ஆயிரம் தண்டம்


யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வர்த்தக நிலைய உரிமையாருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

சுழிபுரம் பொது சுகாதார பரிசோதகரினால் , அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் போது காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை , உரிய சுகாதார நடைமுறையை பின் பற்றாத வர்த்தக நிலைய உரிமையாருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணையின் போது , வர்த்தகர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , வர்த்தகரை கடுமையாக எச்சரித்த மன்று , 40 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்தது. அத்துடன் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களான காலாவதியான பொருட்களை அழிக்கவும் மன்று உத்தரவிட்டது. 

No comments