சீன கூட்டில் போராளிகளிற்கு நல்ல பதிலாம்!



உயிர் நீத்த தமிழ் போராளிகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி ஆட்சியின் கீழ் நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து பகிரந்துள்ளதாக சர்ச்சைகள் மூண்டுள்ளது.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் யாழ் மாவட்ட மாநாட்டில் அழையா விருந்தாளியாகவே கலந்துகொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே  சீன பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு இன்று ஜே.வி.பி தலைமை அலுவலகீனத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளது.

தூதுக்குழுவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறைத் தலைவர் லியு ஜியான்சாவோ மற்றும் இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் சென் சியாங் யுவான் ஆகியோர் அடங்கியிருந்துள்ளனர்.

கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், ஹரினி அமரசூரிய, உறுப்பினர்களான சுனில் ஹதுன்னெத்தி மற்றும் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

No comments