எஞ்சிய துண்டும் உருவப்படுகின்றது



மணலாறின் தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் காணிபிடித்தல்களை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அதன் மற்றொரு பரிணாமமாக கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடுகள் மும்முரமாகியுள்ளது.

முல்லைத்தீவு , கொக்குதொடுவாய் பகுதியில் கோட்டக்கேணி அம்பட்டன் வாய்க்கால் வெள்ளக்கல்லடி, தொட்ட கண்ட குளம் போன்ற இடங்களில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டுடியேற்றப்பட்டுள்ளனர்.

அவ்வாறு  குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள், அங்குள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான வேறு காணிகளை துப்பரவு செய்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அங்கு சென்று திரும்பிய முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் “அக்காணிகளை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை 2015ஆம் ஆண்டு தமக்கு தந்திருப்பதாக கூறியே பெரும்பான்மை மக்கள் துப்பரவு செய்கின்றார்கள். அதற்குரிய நடவடிக்கைகளை கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினரே பார்க்க வேண்டும என தெரிவித்துள்ளார்.

ஆனால் அரச அதிகாரிகள் எவரும் சென்று பார்த்ததாக தெரியவில்லை. ஏற்கனவே தமிழ் மக்களுக்கு ஒதுக்கி வழங்கப்பட்ட காணிகள் அவை எனவும்  துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.


No comments