யேர்மனியில் கத்தியைக் காட்டிவர் காவல்துறையால் சுட்டுக்கொலை!!


யேர்மனியின் மன்ஹெய்ம் பல்கலைக் கழகத்தில் கத்தியைக் காட்டிக்கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் நடந்தது. சுட்டுக் கொல்லப்பட்டவர் சால்புறூக்கனைச் சேர்ந்த 31 வயதுடைய யேர்மன் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டனர். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் இறந்தார்.

குறித்த நபர் மன்ஹெய்ம் பல்கலைக் கழகத்தின் பொருளாதார பீடத்தின் நூலகத்தில் இடையூறு விளைவித்தார். அத்துடன் நுலக ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகவும் அதன்பின்னர் பொிய கத்தி ஒன்றை கையில் வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் கத்தியை வைத்துக்கொண்டு அச்சுறுத்திய நிலையில் அவர் காவல்துறையினரால் சுட்டுக்கொன்றனர்.

இச்சம்பவத்தில் பல்கலைக்கழத்தில் விரிவுரைகள் நடைபெற்றதாகவும் பின்னர் கட்டிடத்திலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தொடர்ச்சியாக நூலகத்தில் இடையூறுகள் விளைவித்ததால் அவருக்கு நூலகத்திற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்தன.

No comments