ரணிலுக்கு ஜெயவேவ?



ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதென்ற நிலைப்பாட்டை தமிழ் தேசிய கட்சிகளில் பெரும்பாலானவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.பொது வேட்பாளர் விடயத்தை கைவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வைந்துள்ளனர்.

இதனிடையே இலங்கையிலுள்ள முன்னாள் போராளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான அரவிந்தன் எனும் நபர் கடந்த மாதம் பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

போராளியான இவர் 08 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவராக இருந்தும் பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஒருவரை வாக்குமூலம் பெறுதல் எனும் போர்வையில் கொழும்புக்கு அழைத்து, அங்கு வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பது என்பது இந் நாட்டின் அதிஉச்ச எதேச்சிகாரத்தையே மீளவும் காட்டியுள்ளது.

நாட்டிலுள்ள முன்னாள் போராளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்“ எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

 

No comments