ஸ்கொட்லாந்து முதலமைச்சர் பதவி விலகினார்!


ஸ்கொட்லாந்தின் முதலைமைச்சர் ஹம்சா யூசப் இன்று திங்கட்கிழமை தனது பதவி விலகலை அறிவித்தார்.

அவருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள இரண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்புகளில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைந்துவிட்ட நிலையில் அவர் இந்த முடிவை அறிவித்தார்.

ஹம்சா யூசுப்பின் தலைமையிலான ஸ்கொட்லாந்துத் தேசியக் கட்சிக்கும் (SNP) ஸ்கொட்லாந்தின் பசுமைக் கட்சிக்கும் இடையில் கடந்த வாரம் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தபோது இச்சிக்கல் எழுந்தது.

ப்யூட் ஹவுஸ் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் எவ்வளவு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் உணரவில்லை என்று முதலமைச்சர் கூறினார். 

அரசியல் பிளவுகளுக்கு அப்பால் எங்கள் உறவை சரிசெய்வது வேறு யாரையாவது தலைமையில் மட்டுமே செய்ய முடியும் என்று நான் முடிவு செய்துள்ளேன் என்று யூசுப் கூறினார்.

ஸ்கொட்லாந்தின் தேசிய கட்சிக்கு ஒரு தலைவரைத்  தேர்ந்தெடுக்கும் வரை தான் முதல் மந்திரியாக இருப்பேன் என்று யூசுப் கூறினார்.

No comments