காசா மீதான இஸ்ரேல் போர்: மாணவர்கள் காஸாவுடன் உறுதியாக நிற்கின்றனர்!!


அமெரிக்க தலைநகரின் மையப்பகுதியில் உள்ள ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக வளாகத்தில் இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"சுதந்திர பாலஸ்தீனம்" என்ற கோஷங்களுடன் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாஷிங்டன், டி.சி., பகுதி முழுவதிலும் இருந்து மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒன்று கூடி பாலஸ்தீனியர்களுடன் காசா மீதான போருக்கு மத்தியில் ஒற்றுமையைக் காட்ட இப்போராட்டத்தை நடத்தினர். 

இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு தங்கள் கல்லூரிகள் உடந்தையாக இருப்பதாகவும் அதை நிறுத்துமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் எதிர்ப்பு முகாமை அமைத்து, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

ஜோர்ஜ் வாஷிங்டனில் உள்ள மாணவர்களுக்கு ஆதரவைக் காட்டவும், ஜோர்ஜ் வாஷிங்டனில் உள்ள அனைத்து மாணவர்களின் கோரிக்கைகளை எழுப்பவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம். 

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஆயுத உற்பத்தி மற்றும் இஸ்ரேலிய நிறவெறியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் இருந்து விலகி, இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுடனான உறவுகளை துண்டிக்க வேண்டும் என வலிறுத்தினர். 

ஜனாதிபதி ஜோ பிடன் சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கு $26bn உதவிக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து அமெரிக்க பல்கலைக்கழங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மாணவர்களை காவல்துறை கைது செய்துவருகிறது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு பல்கலைக்கழங்களுக்குள் நுழைய தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

No comments