தான்சானியா மற்றும் கென்யாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழப்பு


தான்சானியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 155 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் காசிம் மஜலிவா  தெரிவித்தார்.

நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

வெள்ளத்தால் இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 236 பேர் காயமடைந்தனர். 200,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், உட்கட்டமைப்புகள் மற்றும் பயிர்கள் சேதமடைந்தாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக 51,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

அத்துடன் கடுமையான எல் நினோ மழை, பலத்த காற்று, வெள்ளத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுளுடன்  கணிசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். 

இதேபோன்று கென்யாவின் தலைநகர்  நைரோபியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வெள்ளப்பெருக்கில் வீடுகள், தெருக்கள் வெள்ளத்தால் நிரப்பி வழிந்தன. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் மூன்று உடல்களை மீட்டுள்ளோம், மேலும் காணாமல் போனவர்களைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 


No comments