ரிக்டொக் செயலியை விற்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை!! அமெரிக்காவுக்கு அறிவிப்பு!!


டிக்டோக் செயலியை விற்பனை செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை என டிக்டோக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் அண்மையில் டிக்டோக்கை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் தடைக்கு முதல் டிக்டொக்கை விற்பனை அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்யும் ஒரு பரிந்துரையும் அமெரிக்கா முன்வைத்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பைட் டான்ஸ் நிறுவனம் இத்தகவலை அறிவித்தது.

இந்த வார தொடக்கத்தில், டிக்டோக், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான சட்டத்தை நீதிமன்றத்தில் சவால் செய்யப் போவதாகக் கூறியது.

டிட்டொக்கை விற்பனை செய்வது அல்லது தடை செய்யும் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கடந்த புதன்கிழமை கையெழுத்திட்டார்.


No comments