புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

கல்வி அமைச்சை தாக்கிய கூட்டமைப்பினர்?

npc_01.pngவடமாகாண சபையின் கல்வி அமைச்சு மீது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதுடன் அது செயற்பட தவறிவிட்டதாகவும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
வுடமாகாணசபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அங்கு உரையாற்றிய கூட்டமைப்பு சார்பு உறுப்பினர் ம.தியாகராசா வவுனியா பிரதேசங்களில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் அதிபர்கள் பற்றாக்குறைகள் காணப்படுகின்றன .அது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சருக்கு பல தடவைகள் சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் இல்லையென தெரிவித்ததுடன் மக்கள் மத்தியில் செல்லமுடியாதிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்பட்ட 8 பாடசாலைகளில் 3 பாடசா லைகளுக்கு ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. தளபாடங்களும் இல்லை. எங்களால் செய்ய முடிந்த விடயங்களை கூட செய்யாமை பாரிய குற்றமும், வெட்ககேடும் ஆகும்.

 
இதேவேளை உயர்பாதுகாப்பு வலயங்கள் தளர்த்தப்படவேண்டும். படையினர் வெளியேற்றப்படவேண்டும். பாடசாலைகள், ஆலயங்கள் மக்களிடம் கொடுக்கப்படவேண்டுமென தொடர்ச்சியாக போராட்டம் நடத்திய மக்கள் பிரதிநிதிகள் விடுவிக்கப்பட்ட பாடசாலைகளை கண்டுகொள்ளவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார் மற்றொரு மாகாணசபை உறுப்பினரான கஜதீபன்.

 
உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த 16 பாடசாலைகளில் 8 பாடசாலைகள்; விடுவிக்கப்பட்டுள்ளது. அந்த பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படாது அதிபருடன் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

 
எங்களால் செய்யகூடிய விடயங்களை கூட நாங்கள் செய்யாமல் இருப்பது பாரிய குற்றமுமாகும். வலி காமம் வலயத்தில் பல பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை இந்த பாடசாலைகளுக்கு நியமியுங்களென கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட பலரும் கல்வி அமைச்சின் மீது குற்றச்சாட்டுக்களை வாசித்துள்ளனர்.

முகப்பு
Selva Zug 2