புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

திருமலையிலும் ஊத்தி மூடிய சுமந்திரன்!

bo1
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை முதல் பல வழக்குகளை ஊத்தி முடிய தமிழரசுக்கட்சி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று திருமலையிலும் பொங்கியெழுந்துள்ளார்.
சூடைக்குடா முருகன் கோவில் காணியைச் சீர்செய்தபொழுது அனுராதபுர அரசுக்காலப் புராதன சின்னங்களை உடைத்தனர்” என்று குற்றம் சாட்டிப் புதை பொருள் ஆய்வுத்துறை மற்றும் இலங்கைக் காவல் துறையால் தொடரப்பட்ட வழக்கு இன்று மூதூர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது.
குற்றம் சட்டப்பட்டோர் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 10 மேற்பட்ட வழக்கறிஞர்கள் முன்னிலை ஆகியிருந்தனர். புதைபொருள் அல்லது புராதன சின்னங்கள் கொண்ட பகுதி என அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்காத ஓர் இடத்தில் புராதன சின்னங்களை உடைத்தனர் அல்லது சேதப்படுத்தினர் என்று வழக்குதொடர முடியாது . மேலும் பொருள் ஆய்வுத்துறையால் மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்பு”புராதன சின்னங்களைக் கொண்ட பகுதி” என வழங்கிய கடிதத்தையும் ஏற்றுகொள்ள முடியாது . எனவே இந்தவழக்கு அடிப்படையில் சட்ட வலு அற்றது. எனவே இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல்வேறு சட்ட விதிகளைக் காட்டி சட்டத்தரணிகள் வாதாடினார். இந்த நிலையில் இந்தக்குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த கனரக இயந்திர ஓட்டுநரும் உதவியாளருமான இரு சிங்கள இளைஞர்கள் உள்ளிட்ட மூவர் , நீதிபதியிடம் ” தாம் குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டப்பணத்தைச் செலுத்திவிட்டு வீடு செல்லப்போவதாகக்” கூறினர்.
இதனைத்தொடர்ந்து ஆலய அறங்காவல் சபையினரும்;தமது தரப்பு சட்டத்தரணிகளில் நம்பிக்கையற்று தாமும் அவ்வாறு செய்யப்போவதாகக் கூறினர் .இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவ்வாறே செல்லலாம் எனத் தீர்ப்பு வழங்கினார்.
இந்தநிலையில் வழக்கறிஞர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.எனினும் இவ்வாறு புதைபொருள் அல்லது புராதன சின்னங்கள் கொண்ட பகுதி என அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்காத ஓர் இடத்தில் புராதன சின்னங்களை உடைத்தனர் அல்லது சேதப்படுத்தினர் என்று வழக்குதொடர முடியாது என மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக எம்.ஏ .சுமந்திரன் ஊடகங்களிற்கு விளக்கமளித்துவிட்டு கொழும்பு திரும்பியுள்ளார்.

முகப்பு
Selva Zug 2