புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

அங்கயன் செய்தது முறைகேடு: கபே!

slap2சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் பிரச்சாரத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் பிரச்சார பாடல்களை ஒலிக்கவிட்டமை தேர்தல் முறைகேடு என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கபேயின் பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவ்வமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை ஜனாதிபதி சட்டத்தரணியாக்குங்கள் என ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை கேட்கும் இரா.சம்மந்தன் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பற்றிருக்கும் நிலையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பு தொடர்பாக அரசாங்கத்துடன் பேச ஏன் இயலாது போனதென சிறீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்க்காக பலர் முன்வந்திருக்கின்றார்கள். இதற்கு பிரதான காரணம் நாங்கள் போகும் பாதை மிக சரியானதாக உள்ளமையே. எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உண்மையாகவும், எதார்த்தமாகவும் மக்களுக்கு என்ன செய்ய இயலுமோ அவற்றை மட்டுமே கூறியிருக்கின்றோம். சமகாலத்தில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும், தமிழ் தலைவர்களின் எதிர்பார்ப்புக்களுக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றது.

கிராமிய மட்டத்தில் வறுமை, வேலையின்மை, நடத்தை பிறழ்வுகள், என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் தொடர் பாக பேசுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாராக இல்லை. குறிப்பாக வேலையற்ற இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக பேசுமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின்

தலைவர் இரா.சம்மந்தனிடம் கேட்டபோது பேச முடியாது, நாங்கள் உரிமைகளை மட்டுமே பேசுவோம் என்றார். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை ஜனாதிபதி சட்டத்தரணியாக்குங்கள் என ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை கேட்கிறார்கள். மேலும் கடந்தகாலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சகல பிரதேச சபைகளையும் கைப்பற்றியிருந்தது.

ஆனால் என்ன மாற்றம் இங்கே நிகழ்ந்தது? ஆக மொத்தத்தில் தமிழ் மக்கள் அன்றாடம் உரிமைகளை இழந்து கொண்டிருக்கையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உரிமைகளை வாய் பேச்சிலும், பேப்பரிலும் வைத்திருந்து என்ன பயன்? எனவே மக்கள் பின்நோக்கி பார்த்து சில தீர்மானங்களை எடுக்கவேண்டும். மேலும் இப்போது கூட்டமைப்பு, முன்னணி, விடுதலை கூட்டமைப்பு என பல கட்சிகளாக நின்று தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
ஆனால் ஒரு காலத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தவர்கள். கூட்டு களவாணிகள். இப்போது சண்டையிட்டு கொள்வது மக்களுக்காக அல்ல தங்களுக்காகவே. இதனைவிட புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு ஆணை கொடுங்கள் என கேட்கிறார்கள். எனவே மக்கள் இவர்கள் விடயத்தில் விழிப்பாக இருக்கவேண்டும். மேலும் இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கொள்ளையை செய்தவர்களும் இப்போது வந்து நிற்கிறார்கள். அவர்களையும் மக்கள் கவனிக்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முகப்பு
Selva Zug 2