வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மகஜர் கையளிப்பதை ஒளிப்படம் எடுப்பதற்கும் ஊடகவியலாளர்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் இன்று பேரணி நடத்திய மாணவர்கள், மகஜர் கையளிக்கும் முகமாக முதலில் ஐ.நா அலுவலகத்துக்கு சென்றனர்.jaffna-media-block-

அங்கு கடமையில் இருந்த உத்தியோகஸ்தர்கள், மூன்று மாணவப் பிரதிநிகளை மாத்திரம் தமது அலுவலக வளாகத்தினுள் அழைத்து மகஜரைப் பெற்றுக்கொண்டனர்.

அதன் போது, ஊடகவியலாளர்கள் வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அதேபோன்று, வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு மகஜர் கையளிக்க மாணவர்கள் சென்ற போதும் மூன்று மாணவர்கள் மாத்திரமே அலுவலகத்தினுள் உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஊடகவியலாளர்கள் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

முகப்பு
Selva Zug 2