வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

செலவிற்கு பணமின்றி திண்டாடும் வடமாகாணசபை!

வடமாகாணசபைக்கு ஒதுக்கப்படும் நிதி திருப்பியனுப்பிவைக்கப்படுவதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டு பொய்யானதென உறுதியாகியுள்ளது. கடந்த ஒகஸ்ட் வரை செலவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்களிற்கான கொடுப்பனவுகளை செய்ய 515 மில்லியன் மத்திய திறைசேரியிடமிருந்து கோரப்பட்ட போதும் வெறும் 200 மில்லியனையே இரண்டு மாதங்கள் கடந்து மத்திய அரசு விடுவித்துள்ளது.தற்போது மேலும் 685 மில்லியன் தேவையென அரசிடம் கோரப்பட்டுள்ள போதும் அது எப்போது வந்தடையுமென்பது தெரியவில்லையென முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்தது.மத்திய திறைசேரி நிதியினை விடுவிக்காததையடுத்து வேலைகள் மந்தகதியினை சென்றடைந்துள்ளதாக ஒப்பந்தகாரர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிடைக்கின்ற நிதியின் அடிப்படையினில் முன்னுரிமை அடிப்படையினில் கொடுப்பனவுகளை மேற்கொள்ள வடமாகாண திறைசேரி அறிவிப்பு விடுத்திருப்பதாக மேலும் தெரியவருகின்றது.
இதனிடையே 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட சுமார் 252 கோடி ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில், அடுத்த ஆண்டில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, வடக்கு மாகாணசபைக்கு, மீண்டெழும் செலவினத்துக்கு 1865கோடி ரூபாவும், மூலதனச் செலவுக்கு 382கோடியும் ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, 2247கோடி ரூபா வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்படவுள்ளது.

எனினும் கடந்த ஆண்டு மொத்தம், 2499கோடி ரூபா கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு வடக்கு மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடு,; குறைக்கப்பட்டுள்ளது. மீண்டெழும் செலவுக்கான ஒதுக்கீடு சற்று அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மூலதனச் செலவுக்கான ஒதுக்கீட்டில் பெரும் வெட்டு விழுந்துள்ளது.

முகப்பு
Selva Zug 2