வடகிழக்கிலும் பரீட்சார்த்தம்!



ஜனாதிபதி தேர்தல் களம் தெற்கில் சூடுபிடித்துள்ள நிலையில் இன்றைய மேதினம் தேர்தல் பரப்புரை கூட்டமாக பரிணமித்துள்ளது.

இந்நிலையில் தமிழ் கட்சிகள் வடகிழக்கில் தமது மேதின நிகழ்வுகளை நாடிபிடித்து பார்ப்பதற்கான களமாக்கியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய மே தின ஊர்வலமும், மேடை நிகழ்வும் இன்று புதன்கிழமை பிற்பகல் வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட தொழிற்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாடு செய்த மே தினம் மக்களின் எழுச்சி பேரணியோடு நடைபெற்றது.

மே தின கூட்டத்துக்கு முன்பு எழுச்சி பேரணி மற்றும் தொழிலாளர்களின் அவலங்களை சித்தரிக்கும் வாகன ஊர்திகளும் கிளிநொச்சி சித்திவிநாயகர் முன்றலில் இருந்து மத்திய கல்லூரி மைதானம் வரை முன்னெடுக்கப்பட்டது.


தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின நிகழ்வுகள் வவுனியாவில் நடைபெற்றிருந்தது.

அரச பங்காளிகளான ஈழமக்கள் ஜனநாயககட்சியின் மேதின கூட்டம் மற்றும் வாகன பேரணி பருத்தித்துறையில் நடைபெற்றிருந்தது.

அதேவேளை  ஏனைய அமைப்புக்களது மேதின நிகழ்வுகள் பரவலாக நடைபெற்றிருந்தது. 

 

No comments