பொதுவேட்பாளர்:ஒன்றிணைய அழைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.
அத்தகைய கோரிக்கையினை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று புதன்கிழமை(01) வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டமொன்றினையும் நடத்தியுள்ளனர்.
தமிழ் மக்கள் தமது உரிமைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோளாக உள்ளது.
தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே நேற்றைய தினம் வவுனியாவில் சிவில் அமைப்புக்கள் ஒன்று கூடி பொது வேட்பாளர் தொடர்பில் உரையாடியிருந்தன.
இந்நிலையில் இன்றைய தினம் நேற்றைய முயற்சிக்கு ஆதரவாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தியுள்ளன

Post a Comment