அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மோதல்கள்!! காவல்துறை குவிப்பு!!
மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம் தொடர்பாக சமீப வாரங்களாக அமெரிக்கப் பல்கலைக்கழக வளாகங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனிய ஆதரவு முகாம்களில் போராட்டக்காரர்களும் இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்தன.
அப்பகுதியில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். இரும்பு வேலித் தடுப்புகளை காவல்துறையினர் அமைத்து வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் வளைவுக்கு வெளியே ஒரு சில எதிர்ப்பாளர்கள் (இஸ்ரேலுக்கு ஆதரவானர்கள்) உள்ளனர். உள்ளே பாலஸ்தீன ஆதரவாளர்கள் முகாம் அமைத்து போராடுகிறார்கள். இந்நிலையில் இரு தரப்பினரும் தங்கள் இடத்தை பலப்படுத்துகிறார்கள்.
நூற்றுக்கணக்கான இஸ்ரேலுக்கு ஆதரவாளர்கள் UCLA இல் பாலஸ்தீனிய ஆதரவு மாணவர் எதிர்ப்பாளர்களின் முகாமைத் தாக்கினர்.
தற்காலிக தடுப்புகளை உடைக்க முயன்றபோது தாக்குதல் நடத்தியவர்கள் முகாம் பட்டாசு வீசினர்.
போராட்டக்காரர்களுக்கும் எதிர் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டன.
தாக்குதலாலிகள் பலர் முகமூடி அணிந்திருந்தனர்.

Post a Comment