புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

ரெலோ கூட்டத்திற்கு வருகை தந்த பா.டெனீஸ்வரன்!

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவினிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையினில் அக்கூட்டத்தினில் அவர் பங்கெடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். தொடர்ச்சியாக ரெலோவின் கூட்டங்களைப் புறக்கணித்து வந்த வடமாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் பா. டெனிஸ்வரன் இக்கூட்டத்தில் தன்னை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான முடிவு எடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையினில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நோக்கோடு இன்று 12ம் திகதி காலை 10.30மணியளவில் தமிழ் ஈழ விடுதலை ,யக்கத்தின் வவுனியா காரியாலயத்தில் ஒன்று கூடியுள்ளது.
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தமிழீழ விடுதலை ,யக்கத்தின் அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இக் கூட்டத்தில் வட மாகாண அமைச்சராக உள்ள டெலோ கட்சியை சேர்ந்த பா. டெனிஸ்வரன் தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுக்கவுள்ளதாகவும் சம கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக அக்கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முகப்பு
Selva Zug 2