ஞாயிறு, 22 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

அம்மாவின் பதவி இனி யாருக்கும் இல்லை: தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!

palanisamy_jayaதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தினைத் தொடர்ந்து அ.தி.மு.க பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு கட்சி மூன்றாக பிளவடைந்தது.

இந்த நிலையில் பிளவடைந்த கட்சியை மீண்டும் இணைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணியும் இன்றைய தினம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.கவில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும் என பன்னீர் செல்வம் தரப்பினர் நிபந்தனை விதித்துள்ளனர்.

மேலும் குறித்த கூட்டத்தில், புரட்சித் தலைவி அம்மாவின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதோடு துணைப் பொது செயலரான தினகரனுக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினகரனை கட்சியில் சேர்த்ததும் அவரது பதவியும் சட்ட விரோதம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு தினகரனின் அறிவிப்புகள் எதுவுமே கட்சியை கட்டுப்படுத்தாது அதேவேளை அவர் அறிவித்துள்ள புதிய நிர்வாகிகள் பதவிகளும் செல்லுபடியாகாது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்த பதவியில் மற்ற எவரையும் அமர்த்த வேண்டாம். அ.தி.மு.கவில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை, எனவே அதற்கு இணையாக வேறு பதவியை உருவாக்குவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது

முகப்பு
Selva Zug 2