வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

அல்கொய்தாவால் டெல்லியில் பரபரப்பு!

AL;KUVAITHAAஅல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் இன்று காலை டெல்லியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பயங்கரவாதி நேபாளத்திற்குச் தப்பி செல்ல முயற்சி செய்வதாக டெல்லி பொலிஸாருக்கு உளவுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அல்கொய்தாவுடன் தொடர்புடைய ஜாகீர் முஷா பேக்ஸான் எனப்படும் அமைப்பினைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, அண்மைக்காலமாக காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் அல்கொய்தாவின் உறுப்பினர் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக தனிக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முகப்பு
Selva Zug 2