புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

நெதர்லாந்தில் தமிழர் விளையாட்டுத் திருவிழா

நெதர்லாந்தில் தமிழர் விளையாட்டுத் திருவிழா 17.06.2017 சனிக்கிழமை உத்திரக்ற் நியூவகெய்ன்  என்னும் நகரில் வெகு சிறப்பாக நடை பெற்றது. காலை 09.00மணியளவில் ஆரம்பமாகிய இந் நிகழ்வு முதலில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு பின்னர் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.  அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து தேசியக் கொடியும் அடுத்து தமிழீழத் தேசியக் கொடியும் ஏற்றப்பட்டது. பின் தியாகி சிவகுமாரன் அவர்களுக்கு நெதர்லாந்து இளையோர் அமைப்பு பொறுப்பாளரால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும் அகவணக்கம் செலுத்தப்பட்டு விளையாட்டு ஆரம்பமாகியது.
IMG_4664
இவ் விளையாட்டுவிழாவில் உதைபந்தாட்டம், துடுப்பெடுத்தாட்டம் கரப்பந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகளும் இடம்பெற்றன. அத்துடன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான தாச்சி, முட்டியுடைத்தல் சங்கீதக் கதிரை போன்ற பார்வையாளர்கள் போட்டிகளும் நடைபெற்றன.
வெகுசிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் வெற்றி பெற்ற கழகங்களுக்கும் வெற்றியீட்டிய வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் வெற்றிப் பதக்கங்களும் வெற்றிக் கேடையங்களும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி இறக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன.

IMG_4665

IMG_4666

 

IMG_4667

IMG_4668

 

IMG_4669

IMG_4670

IMG_4671

முகப்பு
Selva Zug 2