புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

சொகுசு வாகனங்களை பயன்படுத்த அமைச்சர்களிற்கு அனுமதி!

சர்ச்சைக்குரிய அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகிய இருவரும் தொடர்ந்தும் அமைச்சு வாகனங்களினில் சுற்றிவரமுடியுமெனவும் அதே போன்று அனைத்து கொடுப்பனவு சலுகைகளினையும் பெற்றுக்கொள்ள முடியுமென முதலமைச்சர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு கடைசியாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் புதிது புதிதாக முறைப்பாடுகள் கிடைத்துக்கொண்டிருக்கின்ற நிலையினில் அதிகாரிகளிற்கு உத்தரவிட அனுமதித்தால் முறையான விசாரணைகள் நடைபெறாதெனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தன்னை சந்தித்த வடமாகாணசபை உறுப்பினர்களிடம் இன்றைய சூழலில் வடமாகாண முதல்வரிற்கு எதிரான நடவடிக்கைகள் தவறானவை. பதவி நீக்கம் வரை போவது முட்டாள்தனமானது.

அதை நான் அனுமதிக்க மாட்டேன். சுமுகமாக பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சனையிது. உங்களிற்கு ஏதேனும் பிரச்சனையிருந்தால் முதல்வர், தமிழரசுக்கட்சி தலைவர், பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் பேசி தீர்த்து கொள்ளுங்கள் என திட்டிதீர்த்துள்ளார் இரா.சம்பந்தன்.

நேற்று சம்பந்தனை சந்தித்த தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினர்களிடமே அவ்வாறு பாய்ந்து வீழ்ந்துள்ளார் அவர்.
இதனிடையே முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை விலக்கிக்கொள்ள தமிழரசுக்கட்சி முற்பட்டுள்ளது. முற்றாக அதற்கான ஆதரவு இழக்கப்பட்டுள்ள நிலையில் வீழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையென்பது போல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட உள்ளதாக விடயத்தை திரிபுபடுத்தி மாகாணசபை உறுப்பினரான கேசவன் சயந்தன் கட்சிப்பத்திரிகைக்கு தெரித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான, கே.சயந்தன், வ.கமலேஸ்வரன், அ.அஸ்மின், இ.ஆனோல்ட், ச.சுகிர்தன் ஆகியோர் சந்தித்துள்ளனர். இதன் போதே திட்டிதீர்த்த சம்பந்தன் தன்னை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கை இதுவென சந்தேகம் எழுப்பியுள்ளார்.

முகப்பு
Selva Zug 2