புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள்!

புத்தளம், கற்பிட்டி புன்னந்தீவுக்கு அருகில் உள்ள கடல், இநதியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 89 நட்சத்திர ஆமைகளுடன் ஒருவரை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

ஆமைகளை நான்கு பெட்டிகளில் அடைத்து, படகில் எடுத்துச் சென்று கொண்டிருந்த போது, கற்பிட்டி விஜய கடற்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், ஆமைகளையும் கைப்பற்றியுள்ளனர்.amai

படகில் இருந்த 40 குதிரை வலு கொண்ட இயந்திரத்தையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நட்சத்திர ஆமைகள் நான்கு பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்தாகவும் இவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க இலங்கையை கடத்தல்காரர்கள் பரிமாற்றும் மத்திய நிலையமாக பயன்படுத்தி வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கற்பிட்டி நகரை சேர்ந்தவர்கள். சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளும் சின்னப்பாடு பிரதேசத்தில் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முகப்பு
Selva Zug 2