ஞாயிறு, 21 ஜனவரி 2018
Selva Zug 2

சிறிலங்கா நம்பகமான, பக்கசார்பற்ற செயல்முறைகளை உறுதிப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

uk-flag.jpgநம்பகமான செயல்முறைகளின் மூலம் சுதந்திரமான பக்கசார்பற்ற நிறுவனங்களை உறுதிப்படுத்துவது முக்கியம் என்று  வலியுறுத்தியுள்ளது.

கலப்பு நீதிமன்றப் பொறிமுறைப் பரிந்துரையை நிராகரித்து, சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தலைவர்கள் அண்மையில் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள பிரித்தானிய தூதரக பேச்சாளர்-

“நம்பகமான நீதிப் பொறிமுறைகளின் மூலம், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையே பிரித்தானியா இன்னமும் எதிர்பார்க்கிறது.

அனைத்துலக  மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் நீதிப்பொறிமுறையை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் அழைப்பு விடுத்துள்ளது.

நம்பகமான பொறிமுறைக்கு சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற நிறுவனங்கள் முக்கியமானது என்று அதில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. இந்த விடயத்தில்  கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்கள், வழக்குத் தொடுனர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இன்னும் செய்ய வேண்டியவை நிறையவே உள்ளன.

சிறிலங்கா அரசாங்கம் தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு பிரித்தானியா  தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.” என்று தெரிவித்தார்.

முகப்பு
Selva Zug 2