ஞாயிறு, 23 ஏப்ரல் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
dance

ஐ.எஸ். இயக்கத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போஸ்டர்களால் பீகாரில் பரபரப்பு

ஐ.எஸ். இயக்கத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால், பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ஐ.எஸ். இயக்கத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு அழைப்புபீகார் மாநிலம் ரோத்தஸ் மாவட்டத்தை சேர்ந்த தெஹ்ரியில் ஐ.எஸ் இயக்கத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போஸ்டர்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.

மின்கம்பத்தில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களின் எந்தவொரு தனிப்பட்ட நபரின் பெயரோ அல்லது இயக்கத்தின் பெயரோ இல்லை.  இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி மொகம்மது அன்வர் ஜாவேத் அன்சாரி கூறுகையில் “ஐ.எஸ் இயக்கத்தின் கொடி மற்றும் பெயர் பொறித்து மின்கம்பத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கைப்பற்றியுள்ளோம். ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் ஐ.எஸ் இயக்கத்தில் சேருமாறு பீகார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். இயக்கத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போஸ்டர்
மக்கள் மனதில் சந்தேகத்தை விதைக்க சில சமூக விரோதிகள் இந்த போஸ்டர்களை ஒட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

இந்த போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

முகப்பு
Selva Zug 2