திங்கள், 22 ஜனவரி 2018
Selva Zug 2

அவுஸ்ரேலியா மெல்பேணில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (8ம் திகதி), 16-01-1993 அன்று வங்கக்கடலில் வீரகாவிய -மாகிய மூத்ததளபதி கேணல் கிட்டு  உட்பட பத்து மாவீரர்களின் நினைவாக தமிழர் விளையாட்டு விழா மெல்பேர்ணில் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும்  விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடாத்தப்படுகின்ற இவ்விளையாட்டுவிழா, இந்த ஆண்டும் மெல்பேர்ணில் மிகவும் சிறப்பாக நடந்தேறியுள்ளது.Melbern Sports 01

காலை 9.00 மணிக்கு மெல்பேர்ண் East Burwood மைதானத்தில் ஆரம்பமான இவ்விளையாட்டுவிழா நிகழ்வில்,  ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்  திரு விஸ்ணுராஜன் அவர்கள் ஏற்றிவைக்க,  தமிழீழத் தேசியக்கொடியை இளைய தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளரான செல்வன் ரகு அவர்கள் ஏற்றிவைத்தார்.
Melbern Sports 02
தொடர்ந்து மூத்ததளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு பாரதி தமிழ்ப்பள்ளியின் முதல்வர் திரு வே. பரந்தாமன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.Melbern Sports 03

அதனைத் தொடர்ந்து தமிழீழ மண்மீட்புப் போரில் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களுக்காகவும்  போராட்ட காலத்தில் உயிர்நீத்த பொதுமக்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்- பட்டது. அடுத்து விளையாட்டுப்பேட்டிகளுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதோடு மைதான விளையாட்டுக்கள் ஆரம்பமாகின.
Melbern Sports 05

ஒருபுறத்தில் துடுப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்க சமநேரத்தில் மறுபுறத்தில் சிறுவர்களுக்கான ஓட்டப்போட்டிகள், தவளைப்பாய்ச்சல், பலூன் ஊதிஉடைத்தல், தேசிக்காய் கரண்டியில் கொண்டுஒடுதல் முதலான மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்றன.Melbern Sports 06

மேலும் கயிறு இழுத்தல், சங்கீதக்கதிரை, சாக்குஓட்டம்  போன்ற போட்டிகளும் தாயகத்து பாரம்பரிய  விளையாட்டுக்களில் ஒன்றான கிளித்தட்டுப் போட்டியும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.Melbern Sports 07

மெய்வல்லுனர் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டதோடு, பங்கெடுத்திருந்த அனைத்து சிறார்களுக்கும் பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அத்தோடு சங்கீதக்கதிரை, சாக்கு ஓட்டம் முதலான விளையாட்டுக்களில் பங்கெடுத்து வெற்றிபெற்றவர்களுக்கும் விளையாட்டு விழாவிற்கு வருகைதந்த அதீதிகளினாலும், போட்டிகளின் நடுவர்களினால் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர்.Melbern Sports 08

மேலும் இவ்விளையாட்டு விழாவில் தாயகத்து உணவு வகைகளான தோசை, ஒடியற்கூழ் மற்றும் கொத்துரொட்டி, ரொட்டி முதலான உணவுகளும் வடை, ரோல்ஸ், பற்றீஸ் மற்றும் பாபிகியூ போன்ற சிற்றுண்டிகளும் அத்தோடு  வலூடா உள்ளிட்ட குளிர்பானங்களும் விற்பனை செய்யப்பட்டன. கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது  பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் வருகைதந்து இவ்விளையாட்டுக்களில் பங்கெடுத்தும், பார்வையாளர்களாகவும் கலந்துகொண்டும் சிறப்பித்திருந்தனர்.Melbern Sports 09

கிளித்தட்டுப்போட்டியில் ஜேம்ஸ் அணியினருக்கும் எல்லாளன் அணியினருக்கும் நடந்த இறுதிப்போட்டியில் ஜேம்ஸ்அணியினர் வெற்றியீட்டி வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிக்கொண்டனர். கயிறு இழுத்தல்ப் போட்டியில் பல அணிகள் பங்கெடுத்திருந்த நிலையில் இறுதிப்போட்டியில் வடமராட்சிக் கிழக்கின் உதயம் அணியினர் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிக்கொண்டனர்.Melbern Sports 10

துடுப்பந்தாட்ட இறுதிப்போட்டியிலே நோர்த்தென் ரைகர்ஸ் அணியினருக்கும் சிவாஸ் றீகல் அணியினருக்குமிடையில்  நடைபெற்ற போட்டியில் சிவாஸ் றீகல் அணியினர் வெற்றியீட்டி 2017ம்ஆண்டிற்கான வெற்றிக்கேடயத்தைப் பெற்றுக்கொண்டனர்.Melbern Sports 11

உதைபந்தாட்டத்தில், மில்லர் யுனைற்றட் ரெட் ஸ்ரார் அணியினருக்கும் எல்லாளன் அணியினருக்குமிடையிலான  இறுதிப் போட்டியில் மில்லர் யுனைற்றட் அணியினர் 2 இற்கு 0 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி 2017-ம் ஆண்டிற்கான  வெற்றிக்கேடயத்தினைப் பெற்றுக்கொண்டனர்.
Melbern Sports 12
கரப்பந்தாட்டம் செற்ரப் கேம், ஓவர்கேம் என இரண்டு பிரிவுகளாக நடைபெற்றன. கரப்பந்தாட்டம் செற்ரப்கேம் போட்டியில் மிறர் அணியினருக்கும் மராக் அணியினருக்குமிடையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மராக் அணியினர் வெற்றியீட்டி 2017-ம் ஆண்டிற்கான  வெற்றிக்கேடயத்தைப் பெற்றுக்கொண்டனர்.Melbern Sports 13

விளையாட்டுவிழாவின் இறுதிப்போட்டியாகவும் மிகநீண்டநேரமாகவும் நடைபெற்ற கரப்பந்தாட்டம் ஓவர்கேம்  போட்டியில் ஈழம்போய்ஸ் அணியினரும் டெனிஸ் அணியினரும் பங்கெடுத்திருந்தனர். இப்போட்டியில் டெனிஸ் அணியினர் வெற்றி பெற்று 2017-ம் ஆண்டிற்கான வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொண்டனர்.Melbern Sports 14

விளையாட்டுவிழாவின் இறுதிநிகழ்வாக வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதையடுத்து தேசியக் கொடிகள் இறக்கப்பட்டு இரவு 9.20 மணியளவில் தமிழர் விளையாட்டு விழா 2017 நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவேறியது.Melbern Sports 15Melbern Sports 16 Melbern Sports 17 Melbern Sports 18 Melbern Sports 22 Melbern Sports 21 Melbern Sports 20 Melbern Sports 19 Melbern Sports 23 Melbern Sports 24 Melbern Sports 25 Melbern Sports 26 Melbern Sports 30 Melbern Sports 29 Melbern Sports 28 Melbern Sports 27

முகப்பு
Selva Zug 2