திங்கள், 26 பிப்ரவரி 2018
Selva Zug 2

பஞ்சத்தால் பாதிக்கப்பட்டரா பண்டாரவன்னியன்? – வடமாகாணசபையில் கேள்வி

Pandara-Vanniyan-110117-seithyமல்லாவி நகரில் உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச்சிலை எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் கவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 82ஆம் அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது குறித்த உருவ சிலை தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “மல்லாவி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு கீழ் பண்டாரவன்னியன் என எழுதியால் மட்டுமே அது பண்டாரவன்னியனின் சிலை என மற்றவர்களுக்கு தெரிந்து விடாது.

ஒரு மாவீரனின் சிலையை சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் தோற்றத்தில் அமைத்துள்ளார்கள். வெளிநாட்டில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இங்கே வருகிறவர்கள் அந்த சிலையை பார்த்தால் தமிழர்களின் வீரம் குறித்து என்ன நினைப்பார்கள்? இது பண்டாரவன்னியனை கொச்சை படுத்தும் ஒரு செயல் போன்று அமைகிறது” என குறிப்பிட்டார்.

முகப்பு
Selva Zug 2