புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

முல்­லை இந்து ஆல­யத்­தின் சிலை­கள் உடைப்பு!! 

hindu

இந்து ஆல­யங்­க­ளின் சிலை­கள் உடைப்பு மன்­னா­ரைத் தொடர்ந்­தும் முல்­லைத்­தீ­வி­லும் ஆரம்­பித்­துள்­ளது. நல்­லி­ணக்­கத்­தைக் குழப்­பும் வ­கை­யில் திட்­ட­மிட்டு விச­மி­கள் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டுள்­ள­னர் என்று மக்­கள் கவலை தெரி­வித்­த­னர்.

முள்­ளி­ய­வளை 3 ஆம் வட்­டா­ரப் ப­கு­தி­யில் உள்ள வர­லாற்று தொன்மை மிக்க கோட்டை ஆதி
ஐய­னார் ஆல­யத்­தின் சிலை­கள் நேற்­று­முன்­தி­னம் இரவு விச­மி­க­ளால் உடைக்­கப்­பட்­டது.

முள்­ளி­ய­வ­ளைப் பகு­தி­யில் மக்­க­ளின் காவல் தெய்­வ­மா­க­வும், புது­மை­யான
தெய்­வ­மா­க­வும் குறித்த ஐய­னார் ஆல­யம் விளங்­கி­யது.

மன்­னர் காலத்து வர­லாற்­றுத் தொன்மை கொண்ட இந்­தக் கோட்டை ஆதி ஐய­னார் ஆல­யத்­தில் மூல
மூர்­தி­யாக விளங்­கும் ஐய­னார் சிலை­யும் அரு­கில் உள்ள அம்­மன் சிலை­யுமே
உடைக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு உள்ள ஆஞ்­ச­நே­யர் சிலை­யும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனி­னும் அரு­கி­ல்
இருந்த பிள்­ளை­யார் சிலைக்கு எது­வித பாதிப்­புக்­க­ளும் ஏற்­ப­டுத்­த­வில்லை என ஆலய
நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

மன்­னார் மாவட்­டத்­தில் உள்ள இந்து ஆல­யங்­கள் சில­ வற்­றின் சிலை­கள் இது­வரை கால­மும்
உடைக்­கப்­பட்டு வந்­தன. சில கிறிஸ்­தவ ஆல­யங்­க­ளும் சேத­மாக்­கப்­பட்­டி­ருந்­தன.

கடந்த சிவ­ராத்­திரி தினத்­தன்­றும் மன்­னா­ரில் இந்து மற்­றும் கிறிஸ்­தவ ஆல­யங்­க­ளின்
சிலை­கள் உடைத்­ தெ­றி­யப்­பட்­டி­ருந்­தன.

இந்­தச் சம்­ப­வத்­துக்கு இந்து அமைப்­பு­கள் உள்ளிட்ட பல அமைப்­புக்­க­ளும் தமது கடும்
கண்­ட­னங்களை வெளி­யிட்­டி­ருந்­தன.

இந்த நிலை­யி­லேயே நேற்­று­முன்­தி­னம் முல்­லைத்­தீ­வி­லும் இரண்டு சிலை­கள்
உடைக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பில் முள்­ளி­ய­வளை பொலி­ஸில் ஆலய நிர்­வா­கம்
முறை­யிட்­டது.

அதற்கு அமை­வாக முள்­ளி­ய­வ­ளைப் பொலிஸார் நேர­டி­யாக ஆல­யத்­துக்கு வந்து
விசா­ர­ணை­களை முன்­னெ­ டுத்­துள்­ள­து­டன் அது தொடர்­பான சாட்­சி­யங்­க­ளை­யும்
பதிவு செய்­த­னர்.

”இந்­தச் சம்­ப­வம் விச­மி­க­ளின் திட்­ட­ மிட்ட செயல், மக்­க­ளின் நல்­லி­ணக்­கத்­தைக்
குழப்­பும் செய­லாக இது அமைந்­துள்­ளது. இந்த ஆல­யத்­தின் மீது தாக்­கு­தல்
நடத்­தி­ய­வர்­கள் ஐய­னா­ரின் சரி­யான புது­மை­யைப் புரிந்­து­ கொள்­வார்­கள்.
விரை­வில் கட­வு­ளின் தண்­ட­னை­யை ஏற்­றுக்­கொள்­வார்­கள்” என்று பிர­தேச வாசி­கள்
தெரி­வித்­த­னர்.

முகப்பு
Selva Zug 2