புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

கிபிர் போர் விமானங்களை தரமுயர்த்துவது குறித்து இஸ்ரேலிய நிறுவனம் சிறிலங்காவுடன் பேச்சு

kfirசிறிலங்கா விமானப்படையின் கிபிர் போர் விமானங்களை தரமுயர்த்துவது குறித்து, இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்றீஸ் நிறுவனம் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.

ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையிடம் கைவிடப்பட்ட நிலையில் உள்ள 5 கிபில் போர் விமானங்களை தரமுயர்த்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாகவே சிறிலங்கா அரசுடன் பேசி வருவதாக, இஸ்ரேல் ஏடீராஸ்பேஸ் இன்டஸ்றீஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிபிர் போர் விமானங்களை உற்பத்தி செய்யும், இந்த நிறுவனம், அதன் வடிவமைப்பை தரமுயர்த்தி, பராமரிப்பு உதவி உத்தரவாதத்துடன் வழங்க முடியும் என்றும் கூறியுள்ளது.

முகப்பு
Selva Zug 2