திங்கள், 20 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

மின்சார துறை பணியாளர்களின் விடுமுறை ரத்து!

இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் சகல மின்சார துறை பணியாளர்களினதும் விடுமுறைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் இன்று மதியம் 12 மணி முதல் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்தது.

வேதன குறைப்பாட்டை கலைதல், மின்சார சபை பணியாளர்களின் ஊழியர் சேமலாப நிதிய வழங்கல் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்களது இந்த போராட்ட அறிவிப்பை விடுத்தனர்.

இந்த நிலையிலேயே இன்று முதல் 20ஆம் திகதி வரையில் சகல மின்சார பணியாளர்களினதும் விடுமுறை ரத்துச் செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

முகப்பு
Selva Zug 2