புதன், 22 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

பொன் சிவகுமாரன் அவர்களின் 43ஆம் நினைவு ஆண்டில்  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 43ஆம் ஆண்டின் நினைவுகளை சுமந்து சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் 19.03.2017 அன்று Sportanlage Hochweid Kilchberg என்னும் இடத்தில் உள்ளரங்க  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது.5

காலை 8.30 மணியளவில் மலர் வணக்கம் செலுத்தி, சுடர் ஒளி ஏற்றப்பட்டு மற்றும் மண்மீட்பு போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களுக்காகவும், இலங்கை, இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட  பொதுமக்களுக்காகவும் அக வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.1

சுவிட்சர்லாந்தினைச் சேர்ந்த 22 அணிகளின் விறுவிறுப்பான ஆட்டத்தினாலும், வீரர்களின் சுறுசுறுப்பான விளையாட்டினாலும் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

இவ்வுள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முதலாம் இடம் தாய்மண் (Thaiman) அணியினரும், இரண்டாம் இடம் இளம் சிறுத்தை (Ilam Sirutthai) அணியினரும் மற்றும் மூன்றாம் இடம் தமிழ் யூத் (Tamil Youth) அணியினரும் பெற்றுக்கொண்டனர்.2

அத்துடன் சிறந்த பந்துகாப்பாளர்  இளம் சிறுத்தை (Ilam Sirutthai) அணியினைச் சேர்ந்த பிரகாசனாதன் அவர்களும், சிறந்த விளையாட்டு வீரராக  தாய்மண் (Thaiman) அணியினைச் சேர்ந்த கபிலன் அவர்களும் மற்றும் சிறந்த ஆட்டநாயகனாக தாய்மண் (Thaiman) அணியினைச் சேர்ந்த மஜிந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
3

போட்டிகள் காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மாலை 9 மணியளவில் நிறைவு பெற்றன.46

தமிழ் இளையோர் அமைப்பு – சுவிட்சர்லாந்து

முகப்பு
Selva Zug 2