புதன், 22 நவம்பர் 2017
Selva Zug 2
maveerarnal general

கனடாவில் நடுவானில் விமானங்கள் மோதல் – ஒரு விமானி பலி

கனடாவில் நடுவானில் குட்டி விமானங்கள் மோதி வணிக வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் ஒரு விமானி பலியானார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது.  கனடாவில் நடுவானில் விமானங்கள் மோதல் (2)

கனடாவில் மான்ட்ரியல் பகுதியில் 2 குட்டி விமானங்கள் விண்ணில் பறந்து கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக நடுவானில் ஒன்றையொன்று மோதிக் கொண்டன.

இதனால் நிலை தடுமாறிய விமானங்கள் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள ஒரு வணிக வளாகம் மீது விழுந்து நொறுங்கின.

அவற்றில் ஒரு விமானம் வணிக வளாகம் மீதும், மற்றொன்று அங்குள்ள கார் ‘பார்க்‘ நிலப்பகுதியிலும் விழுந்தன. இந்த விபத்தில் ஒரு விமானத்தின் விமானி மட்டும் பலியானார்.

விபத்துக்குள்ளான விமானங்களில் தலா ஒரு விமானியும், 2 உதவியாளர்களும் இருந்தனர். அவர்களில் ஒரு விமானி இறந்தது போக மீதம் இருந்த 3 பேரும் காயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கனடாவில் நடுவானில் விமானங்கள் மோதல் (1)

விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடக்கிறது. விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு மந்திரி கியூபெக் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.கனடாவில் நடுவானில் விமானங்கள் மோதல் (1)

முகப்பு
Selva Zug 2