வெள்ளி, 19 ஜனவரி 2018
Selva Zug 2

வான்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சங்கரின் வீரவணக்க நாள்

 ஆளுமைநிறைந்த அற்புத மனிதன்மூத்ததளபதியும்,வான்புலிகளின் சிறப்புத்தளபதியும்
கேணல் முகிலன் (சங்கர்;)
வைத்திலிங்கம் சொர்ணலிங்கம்.
விடுதலைக்கு விலையாக 26.09.2001.
sankar annai-21

ஆற்றலும்,ஆளுமையும்,அறிவும்,அன்பும் நிறைந்ததொரு பெருவிருட்சம் சங்கரண்ணா! தாயக மீட்புப் பயணத்தில் இருபது வருடங்கள் தலைமையுடன் பயணித்து இடைநடுவே ஓய்வெடுத்துக் கொண்டுவிட்டார்.

சங்கரண்ணாவின் இழப்பென்பது,எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஈடுசெய்யமுடியாத, ஜீரணித்துக்கொள்ளமுடியாததோர் பேரிழப்பாகும். தேசியத்தலைவர்அவர்களிற்கு உற்ற தோழனாகவும்,போராளிகள்,பொதுமக்கள் மீது ஆழமான பாசம்கொண்டவராகவும் வாழ்ந்துவிட்டுப்போன ஓர் உன்னத தளபதி.

sankar annai-16
எமது விடுதலைப்போராட்டப் பயணத்தில்,தேசியத்தலைவர் அவர்களுடன் உறுதுணையாகிநின்று,தேச விடியலிpற்குப் பங்காற்றிய ஓர் பெரும் விருட்சம் சாய்ந்துவிட்டது!

“இயற்கை வெற்றிடங்களை விட்டுவிடுவதில்லையாம்…!” ஆனால் சங்கரண்ணா அவர்களின் இழப்பென்பது என்றும் வெற்றிடமாகவே இருக்கப்போகிறது..? ஏனெனில் அவர் பன்முக ஆற்றல் கொண்டவராக விளங்கியவர்.

sankar annai-15
அதனால் இவர்; எமது முக்கிய படையணிகளின் ஆரம்ப கர்த்தாவாகவும்,பல படையணிகளிற்கு ஆலோசனை வழங்குபவராகவும் இருந்;துள்ளாரெனலாம்.

ஆளுமை நிறைந்த அற்புத மனிதனின் வாழ்வுப் பக்கங்களில் தெரிந்தவற்றை இங்கே உங்களின் சிந்தைகளிற்கு திறந்துவைக்கின்றேன்.sankar annai-3

வைத்திலிங்கம் மணோன்மணி தம்பதியரிற்கு இரண்டாவது மகனாக 1948ஆம்ஆண்டு 9ம் மாதம் 18ம் திகதி பிறந்த சொர்ணலிங்கம் எனும் இயற்பெயர்கொண்ட சங்கரண்ணா அவர்கள்,ஆரம்பக்கல்வியை வவுனியா தமிழ்மகாவித்தியாலயத்திலும்,பின்னர் தனது கல்விப்பயணத்தை 1959 இலிருந்து 1969ஆம் ஆண்டுவரை ஹாட்லிக்கல்லூரியிலும்(ர்யசவடநலஊழடடநபந) தொடர்ந்தார். பாடசாலைக்காலங்களில் மிகவும் ஒழுக்கமிக்க,ஆற்றல்மிக்க மாணவனாகத் திகழ்ந்ததுடன், விளையாட்டிலும் சிறந்ததொரு வீரனாகத்திகழ்ந்தார். பாடசாலைக்காலத்தில் துடுப்பாட்ட அணியின் தலைவனாக இருந்த சமகாலத்தில் உதைபந்தாட்ட அணியின் தலைவனாகவும் இருந்து சங்கரண்ணா பலமுறை வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து கல்லூரிக்கும் அவ் அணிக்கும் பெருமை சேர்த்திருந்தார்.அதிபராலும்,பலராலும் பாராட்டும் பெற்றிருந்தார்.

sankar annai-13
பாடசாலைநாட்களில் ஆங்கிலப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் சான்றிதழ்களும் பெற்றிருந்ததுடன், ஏனைய மாணவர்களிற்கு வழிகாட்டியாகவும்,முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார்.பின்னாளில் தனது கல்விக்காலத்தை அடிக்கடி நினைவுகூரும் சங்கரண்ணா “ஹாட்லிக்கல்லூரியின்”; அதிபராக இருந்த அமரர் பூரணம்பிள்ளை அவர்களைப்பற்றியும்,அவரது வழிகாட்டல்,போதனைகள்தான் தன்னை சிறந்ததொரு நிலைக்கு இட்டுச்சென்றதெனக் கூறுவார்.

sankar annai-12
சங்கரண்ணா தனது கல்விக்காலத்தை விடுதியில்  தங்கியிருந்தே மேற்கொண்டிருந்தார்.விடுமுறையில் வீடு செல்லும் சங்கரண்ணாவிற்கு தாயாரின் அன்பும்,நல் அறிவுரைகளும் பூரணமாகக் கிடைத்தது. வழிகாட்டியாக சிறந்ததொரு குரு கிடைத்ததும்,அன்பும்,சிநேகபூர்வமாய் ஆலோசனைகள்,அறிவுரைகள் வழங்கும் அன்னையும் கிடைத்தது சங்கரண்ணாவை சிறந்ததொரு மாணவனாக மிளிரச்செய்ததெனலாம்.
இந்தியாவில் இந்துஸ்த்தான் “ஏறோநோட்டிக்கல் எஞ்ஜினியரிங்”(யுநசழயெரவiஉயட நுபெiநெநசiபெ) கல்லூரியில் விமானப் பொறியியல் கல்வியை கற்ற சங்கரண்ணா,அக்காலப்பகுதியில் சிறந்த மாணவனாகத்தேர்வு செய்யப்பட்டு ஆளுநர் அவர்களிடம் தங்க விருதினையும் பெற்றுக்கொண்டார்.

sankar annai-11
கப்பல் பொறியியல் (ஆயசiநெ நுபெiநெநசiபெ); கல்வியை கனடாவில் கற்று பின்னர் தாய்மண்வந்து வவுனியாவில் சிறிதுகாலம் ஆசிரியராகவும்,பின்னர் சுயமுயற்சியில் ஓர் பண்ணை ஒன்றையும் உருவாக்கினார்.வவுனியாவில் வசித்த காலப்பகுதியில், “ஜொலிபோய்ஸ்” விளையாட்டுக்கழகத்தின் உதைபந்தாட்ட அணியின் தலைவனாகச் செயற்பட்டதுடன், அணியின் வளர்ச்சிக்கும்,வெற்றிக்கும் பெரிதும் பங்காற்றியதுடன்,தனது சொந்தப்பணத்தில் அணியின் தேவைகளிற்குப் பெரிதும் உதவியிருந்தார்.

பின்னர் கப்பல் ஒன்றில் இரண்டாம் நிலை இயந்திரப்பொறியியலாளராக இணைந்து நான்கு வருடங்கள் பணியாற்றி,பல்வேறு நாடுகளின் கலாச்சாரம்,மொழி என்பவற்றினை கற்றுக்கொண்டதுடன், சில மொழிகளில் உரையாடும் திறணும் பெற்றுக்கொண்டார்.தான் சென்ற நாடுகளின் துறைமுகங்கள்,பிரபலமான இடங்கள்,காட்சிகள் என்பவற்றினை புகைப்படமெடுத்து படத்தின் பின் பக்கத்தில் இடங்கள் பற்றிய குறிப்புகளை எழுதி தன் ஆசைத் தம்பிக்கு அனுப்பிவைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

sankar annai-10
பின்னர் தாயகம் திரும்பிய சங்கரண்ணா 1983ம் ஆண்டு காலப்பகுதியில் இவரது சகோதரனான லெப் சித்தார்த்தனின் அறிமுகத்துடன் தேசியத்தலைவர் அவர்களை இந்தியாவில் சந்தித்து,தேசியத்தலைவரின் விருப்பிற்கமைய தன்னை முழு நேரப் போராளியாக இணைத்துக் கொள்கின்றார்.தலைவர் அவர்களிற்;கு பக்கத்துணையாகச் செயற்பட்டதுடன், விடுதலைப்புலிகளின் முதலாவது புலனாய்வு அணியான பீட்டா-2(டீ-2) எனும் சங்கேதப் பெயர்கொண்ட அணியை செயற்படுத்துகின்றார்.

தலைவர்அவர்களிற்கு மிகவும் பயனுள்ள ஒருவராகச் செயலாற்றிவந்த சங்கரண்ணா,தேசியத்தலைவரின் போரியல்த் தேடலிற்காக ஆங்கில ஆயுதச் சஞ்சிகைகள்,கட்டுரைகள் என்பவற்றினை மொழிபெயர்த்துக் கொடுக்கும் பணியையும் செய்திருந்தார்.இவரது ஆங்கிலப்புலமை தேசியத்தலைவர் அவர்களிற்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது.பின்னாளிலும் தேசியத்தலைவர் அவர்களிற்கு பிறமொழித்திரைப்படங்கள்,இராணுவ சஞ்சிகைகள் கிடைத்தவுடன் சங்கரண்ணாவை அழைத்து மொழிபெயர்ப்பிப்பது வழக்கமானதொன்றாகவிருந்தது.

sankar annai-9
இந்தியாவில் தேசியத்தலைவர் அவர்கள் இருந்த காலப்பகுதியில், லெப்கேணல் பொன்னம்மான் தலைமையில் நடைபெற்ற எம்மவர்களின் பயிற்சிமுகாம்;களைப் பார்வையிடுவதற்கு தேசியத்தலைவர் அவர்கள் சென்றபோது, அவருடன் கூடவே சங்கரண்ணா அவர்களும் சென்றிருந்தார்.

அத்துடன் அக்காலப்பகுதியில் நடைபெற்ற பயிற்சிமுகாம் இறுதிநிகழ்வுகளையும் காட்சிப்பதிவு செய்தவர் சங்கரண்ணா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.அதேவேளை தேசியத்தலைவர் அவர்களின் திருமண வைபவத்தை புகைப்படம் எடுத்ததும் சங்கரண்ணா அவர்களே..!

sankar annai-8
இந்திய அமைதிகாக்கும் படையென்று இங்கேவந்து படு கொடூரச் செயல்களைப் புரிந்த இந்திய வல்லரக்கப்படைகளின் முதன்மைத்தளபதிகளுடனான பேச்சுவார்த்தையின்போது தேசியத்தலைவர் அவர்களுடன் மொழிபெயர்ப்பாளராகச் சென்ற சங்கரண்ணா அவர்கள் தேசியத்தலைவர் அவர்களின் தீர்க்கமான
முடிவுகளை அப்படியே மொழிபெயர்ப்புச்செய்திருந்தார்.

sankar annai-7
அதன்பின்னர் இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஏதேச்சதிகார, சதி நடவடிக்கைகளை எதிர்த்து,ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்த தியாகதீபம் லெப்கேணல் திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் இந்திய வல்லரக்க அரசினால் செவிசாய்க்கப்படாது,1987.09.26 அன்று லெப் கேணல் தியாகி திலீபன் அண்ணா அவர்கள் வீரமரணமானார்.

sankar annai-6
அதன்பின்னர் 1987.10.05 அன்று எமது மூத்த தளபதிகளான லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட நடவடிக்கைகள் சம்பவங்கள் தேசியத்தலைவர்அவர்களையும்,போராளிகள் உட்பட ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் இந்திய ஏதேச்சதிதகாரத் தனத்திற்கெதிராக வெகுண்டெழ வைத்தது. ‘எமது மரபைக் காத்து நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட, தளபதிகள் உட்பட்ட பன்னிருவரிற்கும் நஞ்சுக் குப்பியை தேசியத்தலைவர் அவர்களின் பணிப்பிற்கமைய கொண்டுசென்று இலாவகமாகக் கொடுத்தவர் சங்கரண்ணா ஆவார்.’

sankar annai-1
தீருவிலில் மூட்டிய தீ எல்லோர் மனதிலும் பெரும் கொளுந்துவிட்டெரிந்தது.இத் தீ இந்திய வல்லாதிக்க அரசின் கனவுகளிற்கு சிதைவைத்ததுடன்,விடுதலைப்புலிகளின் வீரத்தை இந்தியப்படைகளிற்கும்,உலகத்திற்கும் பறைசாற்றிக்கொண்டது.

தந்திரோபாயப் பின் நகர்வினைச்செய்து மணலாற்றுக் காட்டினுள் பாசறை அமைத்துக்கொண்ட தேசியத்தலைவரும் போராளிகளும் இந்திய அராஜகப்படைகளின் முற்றுகையையும் கனவுகளையும் முறியடித்ததுடன்,இந்தியத் தளபதிகள் பின்னாளில் வியந்து பாராட்டக்கூடிய போரியல் சாதனைகளையும் செய்தனர்.இச்சாதனைகளிற்கு மணலாற்றுக்காடு பெரிதும் உதவியிருந்ததும்,இந்தக் காட்டினை வரைபடங்களாக்கி, பாசறைகள்அமைத்தும்,பொறிவெடிகள் புதைத்தும் எதிரிக்கு மரணத்தைப் பரிசாக வழங்கப் பெரிதும் தேசியத்தலைவரிற்கு துணையாகி நின்றவர் சங்கரண்ணா அவர்களே!

sankar annai-5

காடு புலிகளிற்குப் புதிதாக இருந்தாலும்,புன்முறுவல் பூத்த முகத்தினன் சங்கரண்ணா காட்டினை புலிகள் ஒத்திசைவாக்கிக்கொள்ள கற்றுக் கொடுத்திருந்தார்.காட்டு வாழ்க்கைக் காலப்பகுதியில் உருமறைப்பில் மிகவும் முக்கியத்துவம் செலுத்தப்பட்;டதுடன், தாடியின் தேவையும் பெரிதும் உணரப்பட்டது.முகத்தின் உருமறைப்பிற்கும்,பூச்சிகளினால் ஏற்படும் ஒவ்வாமையை தடுக்கும் ஒரு கவசமாகவும் தாடி பயனுள்ள ஒரு படைப்பின் அதிசயத்தை உணர்த்தியதெனலாம்.

தாடியுடனான சங்கரண்ணா எப்போதும் தன்னுடன் திசைகாட்டியும்,கழுத்தில் சிறிய “லைட்” ஒன்றும் தொங்கவிடப்பட்டிருக்கும்.இப்பழக்கத்தை இறுதிவரை தவறாது கைக்கொண்டுவந்தார். இந்தியஇராணுவம் சுற்றிவளைப்பிற்குள்ளிருந்த காலப்பகுதியில் ஒருபெண் போராளி காடுமாறிவிட்டார்.காடுமாறிய அப்பெண்போராளியை மீட்டுவரும் பொறுப்பினை தேசியத்தலைவர்அவர்கள் சங்கரண்ணாவிடம் ஒப்படைத்துவிட, ஒரு சிறு அணியுடன் தடயத்தை அறிந்துசென்று அப்பெண்போராளியை மீட்டிருந்தார் என்பது நினைவுகொள்ளத்தக்கது.

தேசியத்தலைவர் அவர்களிற்கு மிகவும் பக்கபலமாகவும் போராளிகளிற்கு வழிகாட்டும் ஆசானாகவும் செயற்பட்டு எமது தேசியத்தலைவர் அவர்களையும்,போராட்டத்தையும் அழித்துவிடும் எண்ணத்துடன் சமர் செய்த இந்திய வல்லரக்கர்களின் கனவுகளை சிதைந்துபோகச்செய்ததற்கு சங்கரண்ணாவின் பங்கும் மிகவும் பெறுமதியானதாகவிருந்தது.

இந்திய இராணுவம் எம் மண்ணைவிட்டுச்சென்றபின்னர், சிறிலங்கா இராணுவம் மீண்டும் படைநடைவடிக்கைகளை ஆரம்பித்தது. சோர்வும் செயற்திறனும் அற்று இருப்பார்கள் புலிகளெனும் பேராசையில் மணலாற்றில் ஒப்பரேசன் மின்னலெனப் பெயர்சூட்டி பாரிய படைநடைவடிக்கையொன்றை மேற்கொண்டது. இப்படைநடைவடிக்கையை விடுதலைப்புலிகள் தீர்க்கமாகப்போராடி முறியடித்திருந்தார்கள்.இவ் எதிர்ச்சமரிற்கு சங்கரண்ணா அவர்கள் விநியோகப்பொறுப்பாளராகவிருந்து மிகவும் திறம்படச்செயலாற்றியிருந்தார்.

சங்கரண்ணாவின் ஆற்றலினை தேசியத்தலைவர் அவர்கள் புதியதொரு கட்டமைப்பின் தொடக்க கர்த்தாவாகப் பயன்படுத்திக்கொள்கின்றார்.

சங்கரண்ணா அவர்களுடன் குறிப்பிட்ட சில போராளிகள் கொடுக்கப்பட்டு “கடற்புறா”எனும் கடல்சார் நடவடிக்கைக்கான அணி ஒன்று உருவாக்கப்படுகிறது. இவ் அணியே பின்னாளில் கடற்புலிகளெனும் பாரிய படைக்கட்டமைப்பாக வளர்ந்து சிங்களக்கடற்படைக்கு பாரிய சவாலை கொடுத்ததெனலாம். கடற்புறாவென பெயர்சூட்டுவதற்கு இருவேறு காரணங்கள் அமைந்தன.

முதலாவதாக தேசியத்தலைவர் அவர்கள் சாண்டில்யனின் சரித்திர நாவல்களை விரும்பிப் படிப்பது வழக்கம். இலக்கியநயமும், போரியல் நுணுக்கங்களை,களத்தை, பாத்திரங்களை அவர் விபரிக்கும் தன்மை கண்முன்னே காட்சிகளை நிறுத்துவது போலாகும்.

சாண்டில்யன் அவர்களின்“கடற்புறா”எனும் நாவலைக்குறிப்பிடலாம். இதில் சோழர்களின் கடற்பயணம் பற்றியும்,கடல்கடந்து கடாரம்வரைவென்று தமிழர்களின் வீரத்;தையும்,வல்லாற்றலையும் குறிப்பிட்டிருப்பதுடன், இந்த நாவலில் வரும் தளபதியான இதயச்சந்திரன் எனும் கதாநாயகன் வாசகர்கள் நெஞ்சில் இடம்பிடித்ததுபோல் தேசியத்தலைவர் அவர்களின் இதயத்திலும் இடம்பிடித்ததால்தான் லெப் சீலன் அண்ணாவிற்கும் இதயச்சந்திரன் எனும் நாமத்தை சூட்டியிருந்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

கடற்புறா நாவலில், கட்டப்பட்ட கடற்கலத்தின் பெயரையே எமது மூத்ததளபதிகள் குமரப்பா,புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் சென்ற படகிற்கும் சூட்டப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.இந்திய
வல்லாதிக்கத்துரோகத்தனத்தினால் அன்று பன்னிருவேங்கைகளை நாம் இழந்தோம்.அப் பன்னிரு வேங்கைகளில் சங்கரண்ணா அவர்களின் சகோதரரான கரன் என்பவரும் ஒருவர்.இவர் திருமணம் முடித்து இருபிள்ளைகளிற்குத் தந்தையாகவும் இருந்தார்.

இவரது துணைவியான குகனேஸ்வரி என்பவரையே சங்கரண்ணா பின்னாளில் திருமணம் புரிந்திருந்தார் என்பதுடன், திருமணம் புரியாது இருந்துவந்த சங்கரண்ணா தேசியத்தலைவர் அவர்களின் வேண்டுதலிற்கமையவே திருமணம் புரிந்தாரென்பதும் குறிப்பிடத்தக்கது.திருமதி குகனேஸ்வரி அவர்கள் சங்கரண்ணா அவர்களின் விடுதலைப்பயணத்திற்கு பெரிதும் உறுதுணையாகியிpருந்தார்.இவ்வேளையில் திருமதி சங்கர் குகனேஸ்வரி அவர்களைப் பற்றியும் சிறிது குறிப்பிட்டேயாகவேண்டும்.

சங்கரண்ணாவின் போராட்ட செயற்பாட்டிற்கு பின்புலமாகவும் போராளிகளை அன்புடன் அரவணைத்து உபசரிக்கும் தாயாகவும் முள்ளிவாய்க்காலில் விழிமூடிப் போகும்வரை இருந்தாரென்பதை நினைவு கொள்ளவேண்டும்.

சங்கரண்ணா அவர்களிற்கு வழங்கப்பட்ட சிறு அணியினரிற்கு நீரடி நீச்சலில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இவ் அணியில் பயிற்சிபெற்ற சுலோஜன் என்பவர் காரைநகர் கடற்பரப்பில் தரித்துநின்ற கடற்கலத்தை தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்டபோது,வீரச்சாவைத்தழுவிக் கொள்கின்றார்.இவரது பெயரிலேயே கடற்புலிகளின் சுலோஜன் நீரடி நீச்சல் அணி உருவாக்கப்பட்ட தென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வணியே பாரிய கடல் வெற்றிகளைப் பெற்றுத்தந்ததென்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா கடற்படையின் எடித்தாராக் கட்டளைக் கப்பலை தாக்கி முதன்முதலாக கடல்மடியில் வீரவரலாறு எழுதிச்சென்ற, மேஜர் காந்தரூபன்,கப்டன் கொலின்ஸ்,கப்டன் வினோத், ஆகியோர் சங்கரண்ணாவின் வழிகாட்டலின்கீழே கடற்கரும்புலிகளாக புதுச்சரிதம் எழுதிச்சென்றார்களென்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேஜர் காந்தரூபன், கப்டன்கொலின்ஸ் ஆகியோர் “கடற்புறா” அணி ஆரம்பித்த காலம்தொட்டு சங்கரண்ணாவின் உதவியாளர்களாகச் செயற்பட்டார்களென்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் பெயர்களையே சங்கரண்ணா வான்புலிகளின் முகாம்களிற்குச் சூட்டியிருந்தார். சங்கரண்ணா கடற்புறா அணியின் பொறுப்பாளராக இருந்த காலப்பகுதியில்,ஆயுத
விநியோகத்திற்காக கடலிலிருந்து மறைவிடமுகாம்வரை கால்வாய் அமைக்கப்பட்டென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சங்கரண்ணா அவர்களால் கைபிடித்து நடைபழக்கிவைத்த கடற்புறா அணியே பின்னாளில் மாபெரும் கடற்படையாக சிங்களத்தை கதிகலங்கச்செய்து, அமைப்பின் வளர்ச்சியில் பிரதான பங்குவகித்ததெனலாம்.
இவ்வாறாக தேசியத்தலைவர் அவர்களின் எண்ணக்கருக்களிற்கு செயல்வடிவம் கொடுத்துவந்த சங்கரண்ணா அவர்களிற்கு மீண்டுமொரு மிக முக்கியபணி கொடுக்கப்படுகிறது.ஆழக்கடலும் புலிகளின் வசமானதுபோல்,ஆகாயத்தையும் வசமாக்கும் எண்ணக்கருவிற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு மீண்டும் சங்கரண்ணா அவர்களே தேசியத்தலைவர் அவர்களின் தெரிவாகிறார்.

1993ம்ஆண்டு; காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர்வேலி எனுமிடத்தில், முதன்முதலாக வான்புலிகள் அணியினை தேசியத்தலைவர் அவர்கள் ஆரம்பித்து வைக்கின்றார். எல்லோர் மனதும் புத்தெழுச்சி அடைந்து கொள்கிறது.அன்று ஆரம்பிக்கப்பட்ட வான்புலிகள் மெது நடைபோட்டு, உலகமே வியந்த, எதிரியே கலங்கிய அணியாக வலம்வந்தார்களென்பது குறிப்பிடத் தக்கதாகும். இவ் வியத்தகு சாதனைக்கு சங்கரண்ணாவின் துறைசார் அறிவும், அதன்மூலம் அவர் கற்பித்தவைகளும், ஒழுக்கம், தியாகம் இவையாவும் சேர்ந்து கொண்டதால், பாரிய வளர்ச்சியடைந்த சிங்கள இராணுவத்தின் கேந்திர நிலையங்களை தாக்கித் தளம் திரும்பி வரமுடிந்ததெனலாம்.

கல்விசார் நடவடிக்கைகள் விரைவாகவே ஆரம்பிக்கப்படுகிறது.ஏனைய கட்டமைப்புகள் போலல்லாது, மிகவும்,நுண்ணறிவும்,செயற்திறனும் இக்கட்டமைப்பிற்கு அவசியம்.அதற்கேற்றவாறு போராளிகள் சங்கரண்ணா அவர்களால் புடம்போடப்படுகிறார்கள்.தொடர்ச்சியான அறிவூட்டல்கள்.பிரதானமாக ஆங்கிலமொழி கற்பிக்கப்படுகிறது.

காலையிலிருந்து, இரவு படுக்கைக்குச்செல்லும்வரை எவரும் தமிழ் வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது.மீறிப்பயன்படுத்தியவர் சங்கரண்ணா அவர்களிடம் பிடிபட்டால், தண்டனையாக கடதாசி அட்டையொன்றில், கொட்டன் எழுத்தில் பிழைக்கான காரணம் எழுதப்பட்டு தொங்கவிடப்படும். எங்குசென்றாலும்(குறிப்பாக வெளியே செல்வதானாலும்) அகற்றப்படமாட்டாது. தண்டணையென்பது ஒருவனை தண்டிப்பதாய் இருத்தல்கூடாது, அவனது பிழையை உணரவைப்பதாய் இருக்கவேண்டுமென்பதே சங்கரண்ணாவின் எண்ணமாகவிருந்தது.

இவ்வகையான தண்டணையே வான்புலிப்போராளிகளின் வாய்களிற்குள் ஆங்கிலம் எளிதாக நுழைந்ததெனலாம்.

மாலை நேரங்களில் விளையாட்டிற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.அனைவரும் விளையாடச் செல்லவேண்டும்.விளையாட்டு ஒருவனை சுறுசுறுப்பானவனாக, செயல்த்திறன் மிக்கவனாக வைத்திருக்குமென்பார். அவரது கல்விக்காலத்தில் எப்படியானவராகத் திகழ்ந்தாரோ,அப்படியே போராளிகளையும் வைத்திருக்க முயன்றார்.பொதுவாக துடுப்பாட்டம், கரப்பந்து,பூப்பந்து என்பனவே விளையாடுவது வழக்கம்.அனைத்து விளையாட்டிலும் வயதிற்குமீறிய செயற்தின்மிக்கவராக சங்கரண்ணா செயற்படுவார்.

துடுப்பாட்டத்தில் சகலதுறை ஆட்டக்காரரான சங்கரண்ணா ஆரம்பத்துடுப்பாட்டவீரனாகவே களம் இறங்குவார்.இலகுவில் இவரை ஆட்டமிழப்புச்செய்வது மிகவும் பிரயத்தனமானதாயிருக்கும்.விளையாட்டின் நுணுக்கங்களை நன்கு தெரிந்த விளையாட்டு வீரனல்லவா! களத்தடுப்பிலும், அநேகமாக பந்துக்காப்பாளராகவே செயற்படும் சங்ரண்ணாவிடம் எந்தப்பிடிகளும்
தவறவிடப்படுவதுமில்லை, அத்துடன் விளையாடுபவர் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடவேண்டும்.ஏனெனில் லாவகமாக ஆட்டமிழப்புச்செய்துவிடுவார்.

ஒருமுறை மட்டையில் பட்டபந்து மிகவும் தாழ்வாக பறந்தபோது,பாய்ந்து பிடித்தது வியக்கத்தக்கதாகும்.அவரது வயதிற்கும்,உடல்த்தோற்றத்திற்கும் சம்மந்தமில்லாததாகவிருந்தது அவரது விளையாடும் திறன்.

சங்கரண்ணா அவர்கள் உதைபந்தாட்ட உலகில் மிகவும் பிடித்த வீரராக “பெலே”யைக்குறிப்பிடுவார்.அவர் பற்றிய வரலாற்றினை தெரிந்துவைத்திருந்த சங்கரண்ணா “பெலேயை” மிகவும் மதித்தார்.
சிறிய ஒரு அணியாக, ஒரு குடும்பமாக சங்கரண்ணாவின் வழிகாட்டலின்கீழ் மிகவும் ஒழுக்கம்மிக்க ஆளுமை மிக்க போராளிகளாக வளர்க்கப்படுகிறார்கள்.

இரணைமடுவிற்கும் அம்பகாமப்பகுதிக்குமிடைப்பட்ட பாரிய காடும் சிறு பொட்டல்வெளிகளும் சங்கரண்ணாவின் கண்களிற்குள் பதிவு செய்யப்படுகிறது.வேறு சில பிரதேசங்களும் பார்க்கப்படுகிறது.. இறுதியில்தேசியத்தலைவர் அவர்களின் ஆரம்பகால மறைவு வாழ்க்கைப் பிரதேசமே தேர்வு செய்யப்பட்டு துரித கதியில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பொருளாதாரப் பற்றாக்குறையும்,பாரிய கனரக இயந்திர வாகனங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இல்லாத காலப்பகுதி அது.போராளிகளின் கைகள் கடினப் பட்டுப்போகின்றன..அநேக போராளிகள் கல்விசார் நடவடிக்கையில் நின்றவர்கள்.அவர்களிற்கு மண்வெட்டி சிரமத்தைக் கொடுத்தாலும் புலிகளெனும் நாமமும் தாயகம் மீதான பற்றும் இலகுவில் பழக்கப்படுத்திக் கொண்டுவிடுகிறது. கடின, இடைவிடாத முயற்சியின்பேரிலும், சங்கரண்ணாவின் அன்புமிகுந்த வார்த்தைகளும் (இளவயதுப்போராளிகளை “மோனை”
என்றே இவர் அழைப்பார்.

போராளிகளை சுடு சொற்களால் ஏசுவதோ,கெட்டவார்த்தைகளால் திட்டுவதோ இல்லை.போராளிகளின் உள்ளத்தை வருடுபனவாக அவரது அச்சொல்லாடல் அமைந்திருந்தது.) போராளிகளின் சோர்வைநீக்கி அங்கே வான்தளம் அமைய உதவியதெனலாம். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த முதன்மைத்தளபதிகளில் வித்தியாசமான பண்புகளைக் கொண்டவராக சங்கரண்ணா இருந்தார்.போராளிகளுடன் வரிசையில் நின்று உணவு பெறுவதிலிருந்து, குளிப்பதுவரை பொறுப்பாளரென முதன்மைப்படுத்தி தன்னைத் தனிமைச் சிறையில் அவர் இட்டதில்லை.

விசேடமான நாட்களில,; வீட்டிலிருந்து போராளிகள் அனைவரிற்கும் சிற்றுண்டிகள் செய்வித்துக்கொண்டு வருவார்.ஒரு முறை எம் முகாமிற்கு புதிதாக ஒரு சமையலாளர் வந்திருந்தார்.அவர் சங்கரண்ணாவிற்கென பிரத்தியேகமாக முட்டைபொரித்து வைத்திருந்தார்.அவர் சாப்பிட வரும்போது ஏனையவர்கள் சாப்பிட்டுச் சென்றிருந்தனர் அப்போது அவரிற்கு அந்தச் சமையளாளர் பொரித்த முட்டையை வைத்தபோது முதல் கேட்ட கேள்வி எல்லோரிற்கும் பொரித்தனீங்களோ என?அதற்கு அவர் உங்களிற்கு மட்டும்தான் எனக் கூறியதும், சங்கரண்ணா கூறினார் இனி ஒருபோதும் எனக்கென பிரத்தியேகமாகஎதுவும் செய்யக்கூடாது என்றும் எல்லோரிற்கும் என்ன பரிமாறப்படுகிறதோ அதுவே தனக்கும் பரிமாறப்படவேண்டும் எனக் கூறிவிட்டு,எல்லோரிற்கும் பரிமாறிவிட்டு எனக்குமட்டும் பொரிக்கவில்லையெனச் சொல்லக்கூடாதென பகிடியாகக் கூறினார்.

சங்கரண்ணாவின் முகாமில் அனைத்து நடைமுறைகளும் கடுமையாகப் பின்பற்றப்படும்,குறிப்பாக எவராவது வெளிவேலையின் நிமித்தம் சென்றுவிட்டால், உணவு வேளைக்கு வரமுடியாதென தெரிந்தால் முற்கூட்டியே சொல்லவேண்டும், உணவை வீணாக்குவது சங்கரண்ணாவிற்குப் பிடிக்காது. அதேபோல் ஆடைகளை சீராக அணியவேண்டும்.உள்ளேவிடப்படாத மேலாடைகள் சங்கரண்ணா அவர்களினால் அளவுடன் கத்தரிக்கப்படும். இதனால் அனைவரும் நேர்த்தியாக அணிவதை வழக்கப்படுத்திக் கொண்டார்கள்.

சங்கரண்ணா அவர்களால் வாரத்துக்கொருவர் முகாமின் நிர்வாகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவர். இவர் னுழு (னுநுயுருவுலு ழுகுகுஐஊநுசு) என அழைக்கப்படுவார். அவருக்கு பணிகளாக, போராளிகளின் நலன்களைக் கவனித்தல், முகாம் மற்றும் சுற்றாடல் தூய்மையாக இருப்பதைக் கவனித்தல், கொதிக்கவைத்து ஆறிய நீரை குடிக்கப்பயன்படுத்துதல், கொதித்தாறவைத்து பயன்படுத்தாத சூழல்களில் கிருமி நீக்கும் குளுசைகளைப் பயன்படுத்துவதற்கு பங்கீடு செய்தல், அத்தோடு இரவில் பல்துலக்குவதை உறுதிப்படுத்தல், மலேரியா தடுப்பு குளுசைகள் வழங்கல் என அனைத்தையும் கவனிப்பதுடன் இவற்றை பதிவேட்டில் பதிவுசெய்து சங்கரண்ணாவின் பார்வைக்குக் கொடுத்தல், சங்கரண்ணா இல்லாதபோது நிர்வாகப் பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படியானதொரு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கைக்கொண்டார்.

இலங்கை வான்படை விமானங்களின் பலநூற்றுக்கணக்கான வான் தாக்குதல்கள் வான்புலிகளின் கட்டுமானங்கள் மீது நடாத்தப்பட்டபோதும் வான்கலங்கள்மீதோ, போராளிகள்மீதோ ஒரு சிறிதளவு கூட சேதத்தை ஏற்படுத்தவில்லை என்பது இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. சங்கரண்ணா அவர்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட எச்சரிக்கைத்தன்மையும், ஒட்டுக்கேட்டல் நடவடிக்கையும் மற்றும்; சங்கேத பரிபாச உரையாடல்களுமே உதவியது எனலாம். இவற்றை இறுக்கமாகக் கைக்கொண்டதனால்தான் தொற்றுநோய்களின் பிடியிலிருந்து போராளிகளை மீட்டதுடன் இந்திய இராணுவத்துடன் போரிடுவதற்கு மிகவும் துணைபுரிந்தது எனலாம். சங்கரண்ணா ஆளுகை செய்த இவ்வாறான பல நடைமுறைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கரண்ணா அவர்கள் உருமறைப்பிலும் சிரத்தை மேற்கொள்பவர். இவரது உருமறைப்பு பற்றிய கரிசனைகள் மணலாற்று காட்டில் கைகொடுத்ததுபோல் வான்புலிகள் அணியிலும் மிகவும் பெறுமதி மிக்கதாய் அமைந்தது. உருமறைத்தல், போலிகளை உருவாக்குதல் ஆகிய செயற்பாடுகளினாலேயே பலமான இலங்கை வான்படையிடமிருந்து வான்கலங்களையும்,
முகாம்களையும், போராளிகளையும் தற்காத்துக்கொள்ள முடிந்ததுடன் இலங்கை வான்படைகளின் கண்களில் மண்ணைத்தூவிவிட்டு வெற்றிகரமான படைநடவடிக்கைகளை செய்யமுடிந்தது எனலாம்.

இலங்கை வான்படை விமானங்களின் பலநூற்றுக்கணக்கான வான் தாக்குதல்கள் வான்புலிகளின் கட்டுமானங்கள் மீது நடாத்தப்பட்டபோதும் வான்கலங்களையோ, போராளிகளையோ ஒரு சிறிதளவுகூட சேதத்தை ஏற்படுத்தவில்லை என்பது இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. சங்கரண்ணா அவர்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட எச்சரிக்கைத்தன்மையும், ஒட்டுக்கேட்டல் நடவடிக்கையும் மற்றும் சங்கேத பரிபாச உரையாடல்களுமே உதவியது எனலாம்.

முதன்முதலாக அன்று வான்புலிகள் அணி தனது முதலாவது பறப்பை பதிவு செய்து கொள்கிறது. அன்று தேசியத்தலைவர் அவர்களின் கண்களில் தெரிந்த மகிழ்வும் கனவுமே பின்னாளில் கட்டுநாயக்கா வான்தளம் மீதான தாக்குதல், அநுராதபுரம் மீது தரைக்கரும்புலிகளுடன் இணைந்து வான்புலிகளும் நடாத்திய எல்லாளன் நடவடிக்கை, வவுனியாவில் தரைக் கரும்புலிகளுடன் இணைந்து இந்திரா ராடர்; (சுயனயச) அழிப்பு உட்பட, கொழும்பு மீது வான் கரும்புலிகளான கேணல் ரூபன், லெப் கேணல் சிரித்திரன் ஆகியோரின் உயிர்க்கொடைதாக்குதலாக விரிந்ததெனலாம்.

கரும்புலி கேணல் ரூபன் வான்புலிகள் அணியிற்காக பிரிகேடியர் தீபன்அண்ணா அவர்களால் தெரிவு செய்து அனுப்பிவைக்கப்பட்டவராவார்.

இவரது ஆற்றலை இனங்கண்டு அனுப்பியதனூடாக பிரிகேடியர் தீபன் அண்ணா அவர்களின் போராளிகளை இனங்காணும் திறன் வெளிப்பட்டு நிற்கிறது. மிகச்சிறிய பிராயத்தில் தன்னை ஒரு போராளியாக்கிய இந்தக் கரியபுலிக் கேணல் ரூபன், எம் போராட்டத்தை எப்படி நேசித்துள்ளான் என்பதற்கு அவனின்; தாயகம் மீதான பற்றும், ஒழுக்கமிக்க பண்புமே சான்றாகும்.வான்புலிகள் அமைப்பிற்கு வந்த சிலநாட்களில், சங்கரண்ணா அவர்களின் உதவியாளராக கேணல் ரூபன் உள்வாங்கிக் கொள்ளப்படுகின்றான். சங்கரண்ணா தனது பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கரும்புலிக்கேணல் ரூபன் அவர்களை மட்டுமே தன்னுடன் எப்போதும் அழைத்துச் செல்வார்.

பின்னர் பறப்புப் பயிற்சிகள் இடையிடையே நடந்தன. சங்கரண்ணா வான்புலிப் போராளிகளுடன் உரையாடும்போது நகைச்சுவையாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விடயத்தைக் கூறுவார், ‘சூசையின்ரை படகு பழுதடைந்தால்.. கடலிலே மிதக்கும்…எங்கடை பழுதடைந்தால் என்ன நடக்குமென…!’அவர் நகைச்சுவையாக கூறிய கருத்தாழமிக்க வரிகளை வான்புலிகள் பின்பற்றியதால்தான், பாரிய நெருக்கடிகளிற்கு மத்தியிலும், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி பறப்புகளை செய்யமுடிந்தது. வன்னி பெருநிலப்பரப்பு மீதான ஜெயசிக்குறு நடவடிக்கை காரணமாக வான்தளம் தற்காலிகமாக முல்லைத்தீவிற்கு இடம் மாற்றப்பட்டு பறப்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்து செய்யப்படுகிறது.

பின்னர்; எதிரியின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக பறப்புப் பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டன. அதன் பின்னரான காலப் பகுதியில் மரக்கறிப் பயிர்கள்,நெற்செய்கைகள்என,படையணிக்குத் தேவையான வருமானத்தைப் பெறுவதற்கும்,பறப்பு நடவடிக்கை இல்லாத அந்தக் காலப் பகுதியை பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டதுடன்,வற்றாப்பளையில் இருந்த ஒரு வறிய குக்கிராமமான சூரிபுரம் எனும் கிராமத்துமக்களையும் ஈடுபடுத்தி, அம்மக்களின் வறுமையைக் களைவதற்கும் உதவியாக அமைந்தார்.அம்மக்களின் மனதில் சங்கரண்ணா எவ்வளவு உயர்ந்தவராக இருந்திருந்தார் என்பதினை, அவரது வீரச்சாவின் பின்னர் மக்கள் வடித்த கண்ணீர் மழையே காட்டி நின்றது.போராளி என்பவன் மக்களின் மனதில் நிலைத்து நிற்பதற்கு அவனது பண்புகளும்,தியாக சிந்தை, ஒழுக்கம் என்பனவற்றுடன் கண்டிப்புடன் கூடிய வழி நடத்தலுமே ஒரு போராளியை மக்களின் மனங்களில் என்றும் வாழ வைத்திருக்கும்.

அதற்கு கேணல் சங்கரண்ணாவும் ஓர் உதாரண புருசராவார். எவரது குறைகளையும் செவிசாய்த்துக் கேட்டு தன்னால் இயன்றவற்றிற்கு தன்னாலும்,தனக்கப்பாற்பட்டவற்றிற்கானதீர்வுகளைதேசியத் தலைவரிடமும் பெற்றுக் கொடுத்து பலரது நன்றியுணர்விற்கு என்றும்உரித்தானவராகத் திகழ்ந்தார். பல சமர்க்களங்களில் தலைவரிற்குப் பக்கத்திலிருந்து எதிரியின் நகர்வுகளை, அவனின் உளச்சோர்வுமிக்க கட்டளைகளை, ஒட்டுக்கேட்டறிந்து தேசியத்தலைவர் அவர்களிற்கு அறியக்கொடுத்து, களநிலையை தேசியத்தலைவர்அவர்கள் மாற்றியமைத்துக் கட்டளை பிறப்பிக்க உதவியவர் சங்கரண்ணா அவர்கள். குறிப்பாக ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் ஆணையிறவிலிருந்த இராணுவம் தாக்குப் பிடிகக முடியாமல் தப்பியோடப் போவதை அறியக்கொடுத்தவர் சங்கரண்ணா அவர்களே.

சிங்களதேசம் ஆட்டங்கண்ட வரலாற்றுப்பெருமை மிக்க கட்டுநாயக்கா வான்தளம்மீதான கரும்புலித் தாக்குதலிற்கு, பிரத்தியேக பயிற்சிகள், அறிவூட்டல்களை செய்தவர்களில் சங்கரண்ணா அவர்களும் ஒருவராவார். பயிற்சிக்காலத்தில்,அவர்களுடனே தங்கியிருந்து வழிப்படுத்தியிருந்தாரென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். வெற்றிகளிற்கெல்லாம் பங்காற்றிவிட்டு மௌனமாக ஏதும் அறியாதவர்போல் உலாவும் ஓர் அற்புதமான மனிதர் இவர்.

பல விசேட பயிற்சிகளின்போது மொழிபெயர்ப்பாளராகவும், போராளிகள் பயிற்றிவிப்பாளர்களிற்கு ஒரு பாலமாகவும் செயற்பட்டு, பயிற்சிகளை திறம்பட நிறைவுசெய்வதற்கு சங்கரண்ணா உதவியிருந்தார்.

முகப்பு
Selva Zug 2