வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

பொறுப்பு கூறல்- அரசியல் நல்லிணக்கத்தில் ஸ்தம்பிதம்!

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை அளித்த பொறுப்பு கூறல் மற்றும் அரசியல் நல்லிணக்கம் பற்றிய வாக்குறுதி ஸ்தம்பித நிலையிலேயே உள்ளது.

அதேபோன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச சாசனத்துக்கு இணங்க தயாரிக்கப்பட்ட சட்டம் திகதியிடப்படாமல் உள்ளமை ஏற்புடையதல்ல என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் தொடர்பாக மனித உரிமைகள் கண்ணகாணிப்பகத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கை நேற்று வெளியிடப்படட்டது . அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

இலங்கையில் 2015 இல் மைத்திரிபால சிரிசேன மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து ஜனாதிபதிபதியானது முதல் 2017 இலும் ஊடகங்களுக்கும் மற்றும் சிவில் சமூகங்களுக்கும் பொதுவாக செயற்படுவதற்கு கதவுகள் திறந்தே உள்ளன. ஆனால் 2015 இல் ஐ. நா மனித உரிமைக் பேரவையில் இலங்கை அளித்த பொறுப்பு கூறல் மற்றும் அரசியல் நல்லிணக்கம் பற்றிய வாக்குறுதி ஸ்தம்பித நிலையிலேயே உள்ளது.

அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் ஜனாதிபதியின் வாக்குறுதி இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச சாசனத்துக்கு இணங்க தயாரிக்கப்பட்ட சட்டம் திகதியிடப்படாமல் உள்ளது.

மத சிறுபான்மையினர் பாதுகாப்பின்மை எனும் அச்சத்தில் உள்ளனர். 31 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை பௌத்த தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. காலியிலும் வவுனியாவிலும் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்திற்கும் இடையே வன்முறை மூன்டது. முஸ்லிம்களின் வீடுகளும் வியாபார ஸ்தலங்களும் சேதமாக்கப்பட்டன.

விஷேட நீதி மன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதை சிரேஷ்ட அமைச்சர்கள் எதிர்க்கின்றனர். இதையே ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவிக்கின்றனர்.

2015 தீர்மானத்தின் படி நான்கு தூண்களில் ஒன்றாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அமைகிறது. அரசாங்கம் இது தொடர்பாக சட்டம் இயற்றினாலும் 2017 செப்டெம்பர் வரை இது ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோருககான அலுவலகத்துக்குரிய ஆணையாளர்கள் இது வரை நியமிக்கபடவில்லை. மனித உரிமைகளைப் பாதுகாப்போம் என இலங்கை அரசு வழங்கய வாக்குறுதி செயல்வடிவம் பெறாமல் உள்ளது.

செப்டெம்பர் 2017 இல் அரசாங்கம் புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. 2016 இல் மேற்கொள்ளப்பட்ட தேசிய கலந்துரையாடலை இந்த இடைக்கால அறிக்கை பிரதிபலிக்கவில்லை. ஆனால் இந்த இடைக்கால அறிக்கை பல்வேறு அரசியல் கட்சிகளினால் வரவேற்கப்பட்டது. ஆனால் இது வரை இது தொடர்பான பாராளுமன்ற விவாதம் நடைபெறவி;ல்லை.

சர்சதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்து தொடர்புகளைப் பேணி வருகிறது. ஐ.நா நிபுனர்கள் இலங்கைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஐ.நா மனித உரிமைக் பேரவையுடனும் ஆணையாளருடனும் அரசு தொடர்பைப் பேணி வருகிறது.

முகப்பு
Selva Zug 2