புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

யாழ்.பல்கலையில் மாணவர்களிற்கெதிராக விசாரணை!

jaffna university 01 1யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தி, தவறிழைத்த மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைகழக கலைபீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக பதிவாளரிடம் நேற்றைய தினம் வினவிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இம்மோதல் சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து கலைபீடத்தின் நுன்கலை மற்றும் சட்ட பீடங்களை தவிர்ந்த ஏனைய பீடங்களை சேர்ந்த 3ஆம், 4ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைகழகத்துக்குள் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் விடுதிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக துனைவேந்தர், மாணவ ஆலோசகர்கள், ஒழுக்காற்றுத் துறையினர் ஒன்றுகூடி ஆராய்ந்ததன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் விசாரணை நடத்தி இதற்கு தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

முகப்பு
Selva Zug 2