புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

வேட்பாளரை தாக்க முயன்ற தமிழரசு கட்சி ஆதரவாளர்களை எச்சரித்து விடுதலை செய்தது நீதிமன்றம்!

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தங்களது பிரதேச தேர்தல் அலுவலகத்தை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஒருவரை அலுவலகத்திற்கு உள்நுழைந்து தாக்குவதற்கு முயன்ற கிளிநொச்சி தமிழரசு கட்சியின் குறித்த பிரதேச வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவரை கடுமையாக எச்சரித்து பிணையில் விடுதலை செய்தது கிளிநொச்சி நீதவான் நீதின்றம்.

குறித்த தாக்குதல் முயற்சி சம்பவம் கடந்த புதன் கிழமை பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் உடனடியாக தர்மபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து பிரமந்தனாறு பிரதேசத்தின் தமிழரசு கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்களை தலா ஜம்பதாயிரம் ஆட் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், தேர்தல் முடியும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும் என்வும் தெரிவித்து வழக்கை எதிவரும் மார்ச் மாதம் ஒத்தி வைத்துள்ளது.

முகப்பு
Selva Zug 2