ஞாயிறு, 23 ஜூலை 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

வடக்கில் 27 பட்­ட­தா­ரி­க­ளுக்கு இன்று நிய­ம­னம்

paddatharikalகணித , விஞ்­ஞான பாடங்­க­ளுக்­கான பட்­ட­தா­ரி­கள் நிய­ம­னத்­துக்­காக இடம்­பெற்ற நேர்­மு­கத் தேர்­வில் சான்­றி­தழ் சமர்ப்­பிக்­கத் தவறி காலம் தாழ்த்தி அதனை வழங்­கிய 27 பேருக்கு இன்று நிய­ம­னம் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக வட மாகா­ணக் கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­தி­ரன் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சின் கீழ் உள்ள பாட­சா­லை­க­ளில் நில­வும் கணித , விஞ்­ஞான பாடங்­க­ளுக்­கான வெற்­றி­டத்­துக்­குக் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி 219 பேர் நிய­மிக்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளில் 181பேர் தமது கட­மையை பொறுப்­பேற்­றுள்­ள­னர்.

இந்த நிலை­யில் வடக்கு மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளத்­துக்கு உட்­பட்ட பாட­சா­லை­க­ளில் 418 கணி­தம் மற்­றும் விஞ்­ஞான பாட ஆசி­ரி­யர்­க­ளுக்­கான வெற்­றி­டம் காணப்­பட்­டது. அந்த வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­காக கடந்த பெப்­ர­வரி 9ஆம் திகதி பத்­தி­ரி­கை­கள் மூலம் விண்­ணப்­பம் கோரப்­பட்­டது.

இதற்­காக விண்­ணப்­பித்த 353 பட்­ட­தா­ரி­க­ளில் 219 பேர் மட்­டுமே தகு­தி­யா­ன­வர்­கள் என நேர்­மு­கத்­தேர்­வின்­போது கண்­ட­றி­யப்­பட்­ட­னர். சில பட்­ட­தா­ரி­கள் நேர்­மு­கத் தேர்­வுக்­குத் தோற்­றி­ய­போ­தும் சான்­றி­தழ் கைவ­சம் இல்­லாமை கார­ண­மாக அத­னைச் சமர்ப்­பிக்க சந்­தர்ப்­பம் கோரி­யி­ருந்­த­னர் .

அந்­தக் கோரிக்­கை­யின் பிர­கா­ரம் அவர்­க­ளுக்கு மேலும் ஒரு­மாத கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­தக் காலத்­தில் மேலும் 27 பட்­ட­தா­ரி­கள் தமது சான்­றி­த­ழைச் சமர்ப்­பித்­தி­ருந்­த­னர்.

அவ்­வாறு சமர்ப்­பித்­த­வர்­க­ளின் சான்­றி­தழ் பரி­சீ­லிக்­கப்­பட்­டது. அவர்­க­ளுக்கு நாளை (இன்று) நிய­ம­னங்­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­ன-­என்­றார்.

முகப்பு
Selva Zug 2