புதன், 24 ஜனவரி 2018
Selva Zug 2

மாட்டிவிட்டார் கபில ஹெந்தவிதாரண!

Kabila-Henthavitharanaசிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண பதவியில் இருந்தபோது, அவரது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 3.2 மில்லியன் ரூபா தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இப்பணம் யாழ்ப்பாணத்திலிருந்து வங்கியினில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த 14ஆம் நாள் மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரணவிடம், 8 மணிநேரத்துக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் மறுநாளான 15ஆம் நாளும், அவரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. மீண்டும் அவர் இந்த வாரம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் விசாரணை செய்யப்படவுள்ளார்.

தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பணம் தொடர்பாகவே அவரிடம் விசாரிக்கப்பட்டது. அவ்வேளை அது யாரிடம் இருந்து எதற்காக, எப்படி வைப்பிலிடப்பட்டது என்பதனை அவர் வாக்கமூலமாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கிக்கொண்டிருக்கும் டாண் தொலைக்காட்சியின் உரிமையாளரான குகநாதனால் அப்பணம் வழங்கப்பட்டமை உறுதியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த டாண் தொலைக்காட்சியின் பினாமிகளாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண உள்ளமை விசாரணையினில் கண்டறியப்பட்டுள்ளது.

விசாரணையின் தொடர்ச்சியாக டாண் தொலைக்காட்சி பணிப்பாளர் குகநாதன் மற்றும் அதன் செய்தி ஆசிரியரும் முன்னாள் விடுதலைப்புலிகள் தயா மாஸ்டர் ஆகிய இருவரும் கைது செய்யப்படலாமென சந்தேகிகப்படுகின்றது.

இதனிடையே குறித்த டாண் தொலைக்காட்சிக்கு கமெரா உள்ளிட்ட உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்கியவகையால் வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் தொடர்பினில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

முகப்பு
Selva Zug 2