திங்கள், 23 அக்டோபர் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
Government-and-Politics-in-Sri-Lanka
dance

வணபிதா எழில் அடிகளாருக்கு அழைப்பு!

முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்கள் நாட்டப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்ய வணபிதா எழில் அடிகளார் வவுனியா காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாக்கால் குறித்து எழுந்த குறைப்பாடுகள் தொடர்பாக காவல்துறை அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவிற்கு அமைவாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்களை செதுக்கியவரிடமும் வவுனியா காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்காக உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுகற்களில் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளடக்கபட்டு இருப்பதாக சந்தேகத்தை எழுப்பியுள்ள காவல்துறையினர் அதுதொடர்பிலான விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கற்களை நினைவு கூருவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவுக்கு எதிரான நகர்தல் பத்திரம் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையினில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது குறித்த நினைவுக்கற்களில் விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்கள் இல்லை எனவும் 4 வயது குழந்தை முதல் முதியோரின் பெயர்களே பொறிக்கபபட்டுள்ளதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு
Selva Zug 2