திங்கள், 27 மார்ச் 2017
Selva Zug 2
Thileepan vilamparam swiss
leema Travels
dance
Swiss nattiyamail

சம்பந்தன் வீட்டுக்கு முன் போராட்டம்!

திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன் திரண்டு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 15 தினங்களாக, கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனையின் முன்னே சுழற்சி முறையிலான உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், ஞாயிறன்று மாலை அங்கிருந்து அகன்று திருகோணமலை தபால் நிலைய வீதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைரின் இல்லத்தின் முன்னே திரண்டனர்.

?????????????????????????????????????????????????????????

sampanthan-home-seige-200117-seithy (2)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த விவரங்களை வெளியிட வேண்டுமென்றும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், 15 நாட்களாக கிழக்கு மாகாண ஆளுநர் பணிமனை முன்பும், தற்போது எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனின் இல்லத்தின் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

முகப்பு
Selva Zug 2