வியாழன், 22 பிப்ரவரி 2018
Selva Zug 2

பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்! மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Brad Adamsநல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணியின் அறிக்கையின் பரிந்துரைகளை  அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

உண்மை மற்றும் நியாயம் தொடர்பான இலங்கை மக்களின் அபிலாஷைகள் குறித்து பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்ட முத லாவது கருத்துக் கணிப்பாகவே இது அமைந்துள்ளதாக  மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணியின் முக்கிய பரிந்துரைகளில், சர்வதேச மற்றும் உள்நாட்டு நீதிபதிகளையும் ஏனைய அதிகாரிகளையும்  உள்ளடக்கிய கால எல்லையற்ற யுத்தக் குற்ற நீதிமன்றத்தை உருவாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதையும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நல்லிணக்க செயலணியின் அறிக்கை குறிப்பிடத்தக்க அளவில் காத்திரமாக உள்ளதாகவும் நிலைமாறு நீதிப் பொறிமுறை தொடர்பில் அனைத்து சமூகத்தினரும் வெளியிட்ட கரிசனைகள் மற்றும் தேவைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா கவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு உறுதி அளித்தவாறு, குறித்த பரிந்துரைகள் தற்போது அரசாங்கத்தின் உடையதாக மாறியுள்ளதாகவும் அவற்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், நீதிக்கு புறம்பான கொலைகள், சித்திரவதை, அரச மற்றும் விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள், குறித்து நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதை அரசாங்கம் தவிர்த்திருந்த்தாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் 2015 ஆம் ஆண்டு பதவியேற்ற  புதிய அரசாங்கம் இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் இணக்கமான அணுகுமுறையை பின்பற்றிவருகின்றது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும் தேசிய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களான நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் விசேட நீதிமன்றத்தில் சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கம் தொடர்பான பரிந்துரையை உடனடி யாக நிராகரித்திருந்தனர் எனவும் சர்வதேச கண்காணிப்பகம் கூறியுள்ளது.

நிலைமாறு நீதிப் பொறிமுறை குறித்து பரந்த அளவான கலந்துரையாடலை மேற்கொள்ளும் பொருட்டு, பல்லினங்களை கொண்ட செயலணியை உருவாக்குவதற்கு  அரசாங்கம் இணங்  கியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணி ப்பாளர் கூறியுள்ளார்.

நாடாவிய ரீதியில் குறித்த செயலணி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளதாகவும் அந்த செயலணியின் முக்கிய பரிந்து ரைகளை தவிர்ப்பதற்கு அரசாங்கத்தால் முடியாது எனவும் பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதி, மாத்திரமல்லாமல் கொடூரமான யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கம் மற்றும் நீதியை எதிர்பார்க்கும் சொந்த மக்களினது கரிசனைகளை அரசாங்கம் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முகப்பு
Selva Zug 2