புதன், 21 மார்ச் 2018
Selva Zug 2

முள்ளிக்குளம் கிராமத்தை வன ஜீவராசிகள் திணைக்களம் உரிமை கோருகின்றது

musali-mannarமன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முள்ளிக்குளம் கிராமத்தின் வாழ்வாதார நிலமான 300 ஏக்கரை கடற்படையினர் விடுவித்த போதிலும் வன ஜீவராசிகள் திணைக்களம் அனுமதி மறுப்பதாக கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் இவ் நிலத்தில் 20 ஆண்டுகளாக விவசாயம் செய்த மக்கள் தெரிவிக்கையில் ,

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முள்ளிக்குளம் கடற்படையினர் 2007ம் ஆண்டு இங்கு அமைத்த முகாமிற்காக எமது வாழ்வாதார வயல் நிலங்களையும் சேர்த்து அபகரித்தனர். அவ்வாறு அபகரிக்கப்பட்ட பிரதேசத்தினை விடுவிக்குமாறு அன்றிலிருந்து பல கோரிக்கைகளை முன்வைத்தோம். இறுதியில் குறித்த விடயம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக பாதுகாப்பு அமைச்சு வரையில் கொண்டு செல்லப்பட்டது.

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சிற்கு கொண்டு செல்லப்பட்டும் நீண்ட பேச்ணுவார்த்தைகளின் மத்தியில் மேற்படி பிரதேசத்தினை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டு இந்த ஆண்டில் அப்பகுதியில் இருந்து கடற்படையினர் விலகிச் சென்றனர். இவ்வாறு கடற்படையினர் அப்பகுதியில் இருந்து அகன்றதும் குறித்த நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டவேளையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பிரதேசம் தமது ஆளுகைக்குட்படாத தெரிவித்து விவசாயத்திற்கு தடைபோடுகின்றனர்.

இவ்வாறு கடற்படையினரிடம் இருந்த 300ஏக்கர் நிலத்தினை மீட்பதற்காக நாம் நீண்டகாலமாக பல முயற்சிகள் மேற்கொண்டபோதெல்லாம் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளாத திணைக்களம் எமது முயற்சியினால் விடுவிக்கப்பட்ட நிலத்திற்கு உரிமை கோருகின்றனர்.

மேற்படி பிரதேசமானது வன ஜீவராசிகளின் நீர் அருந்தால் பிரதேசத்திற்காக ஒதுக்கப்பட்டதாகவே கூறுகின்றனர். நாமும் கட்டிடம் அமைத்து வாழ்வதற்கு இப்பகுதியினைக் கோரவில்லை. வயல்செய்து வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதற்காகவே கோருகின்றோம் இதனால் எவ்வித பாதிப்பும் நிகழவும் வாய்ப்பில்லை. எனவே எமது முயற்சினால் விடுவிக்கப்பட்ட எமது வாழ்வாதார நிலங்களை எம்மிடம் ஒப்படைக்க ஆவண செய்யவேண்டும். எனக் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இது தொடர்பில் முசலிப் பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது்,

முள்ளிக்குளம் கிராமத்தின் மக்கள் தமது வாழ்வாதார நிலமான 300 ஏக்கரை கடற்படையினர் வசமிருந்து விடுவித்து தருமாறு நீண்டகாலம் கோரியிருந்தனர். நீண்ட முயற்சியின் பின்னர் அது விடுவிக்கப்பட்டது. தற்போது அப்பகுதியை வன ஜீவராசிகள் திணைக்களம் உரிமை கோருகின்றனர். அதாவது முசலி மோதரை ஆற்றில் இருந்து 1.6 கிலோ மீற்றர் பகுதி வன ஜீவராசித் திணைக்களத்திற்குரியது என வர்த்தகமானி பிரசுரித்திருப்பதன் மூலமே அவர்களின் ஆளுகை ஆகின்றது.

இருப்பினும் குறித்த பகுதியில் கட்டிடம் எவையும் கட்டப்படாது வயல் செய்கைக்கு அனுமதிக்குமாறு விவசாயிகளின் கோரிக்கை தொடர்பில் உரியவர்களின் கவனத்நிற்கு கொண்டு செல்லப்படும். என்றார்.

முகப்பு
Selva Zug 2