வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது


ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருமேனியால் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து நாட்டில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களிடமிருந்து குறித்த சந்தேக நபர் 3 இலட்சம் முதல் 7 இலட்சம் ரூபா வரை பெற்றுள்ளார். அதன் பிரகாரம் சந்தேக நபர் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்துள்ளமை வெளிப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் கொழும்பில் தங்கி இருந்து இந்த மோசடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 

இந்த மோசடி வியாபாரத்துக்கு சந்தேக நபருக்கு உதவியாக இருந்த மேலுமொரு நபர் இனம் காணப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் அவரும் கைதுசெய்யட இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


No comments