கனடாவில் சீக்கியத் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது!!


கனடாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் இராஜதந்திர மோதலைத் தூண்டியதாக மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (வயது45) கடந்த ஜூன் மாதம் வான்கூவர் புறநகர் பகுதியில் உள்ள பரபரப்பான கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அரசு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இராஜதந்திர ரீதியிலான மோதல்கள் அதிகரித்தன.

இந்த குற்றச்சாட்டை டெல்லி கடுமையாக மறுத்துள்ளது.

சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.  கரன் ப்ரார் (வயது 22), கமல் ப்ரீத் சிங் (வயது 22) மற்றும் கரண் ப்ரீத் சிங் ((வயது 28) எனக் கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் ஆல்பர்ட்டாவின் எட்மண்டனில் வசித்து வந்தனர். அவர்கள் மீது முதல் நிலை கொலை, கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மூன்று முதல் ஐந்து வருடங்களாக கனடாவில் இருந்ததாக கனேடியக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்திய அரசாங்கத்துடனான தொடர்புகள் குறித்து விசாரணைகள் தொடர்வதாகக் காவல்துறை மேலும் கூறியது.

இந்த விடயங்களில் தனித்தனியான மற்றும் தனித்துவமான விசாரணைகள் நடந்து வருகின்றன. 

புலனாய்வாளர்கள் இந்தியாவில் உள்ள சகாக்களுடன் இணைந்து பணியாற்றி வந்தமையும் தெரியந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொலையில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், மேலும் கைது அல்லது குற்றச்சாட்டுகள் இருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

நிஜ்ஜர் ஒரு சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஆவார், அவர் காலிஸ்தானுக்காக பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார் - இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் ஒரு சுதந்திர சீக்கிய தாயகம் உருவாக்கப்பட வேண்டும்.

1970 களில், சீக்கியர்கள் இந்தியாவில் ஒரு பிரிவினைவாத கிளர்ச்சியைத் தொடங்கினர். இது அடுத்த தசாப்தத்தில் அடக்கப்படுவதற்கு முன்பே ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இந்தியா கடந்த காலங்களில் திரு நிஜ்ஜாரை ஒரு தீவிரவாத பிரிவினைவாத குழுவிற்கு தலைமை தாங்கிய பயங்கரவாதி என்று கூறியது.

கடந்த ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி வான்கூவருக்கு கிழக்கே 30 கிமீ  தொலைவில் உள்ள சர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் "ஹிட் லிஸ்ட்டில்" இருப்பதாகவும், அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அவர் இறப்பதற்கு முன்பு கனேடிய உளவுத்துறையால் எச்சரிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.

No comments