பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்தது: 20 பேர் பலி!! 21 பேர் காயம்!!


பாகிஸ்தானின் வடக்கு மலைப் பகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் இன்று வெள்ளிக்கிழமை பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஐவர் ஆபத்தான் நிலையில் இருக்கின்றனர். அனைத்து  மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள ராவல்பிண்டி நகரிலிருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு, சீனாவின் எல்லைக்கு அருகில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானின் வடக்கு மலைப்பகுதிக்கு பேருந்து சென்றதாக உள்ளூர் அதிகாரி ஃபயாஸ் அகமது, ஜெர்மன் டிபிஏ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள சிலாஸ் நகருக்கு அருகே உள்ள வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சிந்து நதி பாயும் பாறை பள்ளத்தாக்கில் விழுந்ததாக பிரெஞ்சு ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இராணுவ ஹெலிகாப்டர்களின் ஆதரவுடன் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களை கரடுமுரடான நிலப்பரப்பில் இருந்து மீட்டனர்.

No comments