சுமனரத்ன காலில் வீழ்ந்தார்!தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என பொது வெளியில் எச்சரிக்கை விடுத்திருந்த மட்டக்களப்பு - மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பகிரங்கமாக பொது மன்னிப்பு கோரியுள்ளார்.

தான் மிகுந்த மன வேதனையில் இருந்தததாகவும், அதன் காரணமாக இவ்வாறு பேசியதாகவும் அவர் தமிழர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், ஊடகவியலாளர்கள் சிலர் என்னை வம்புக்கு இழுப்பதை போல் செயற்ப்பட்டனர். என்னை கோபத்திற்கு உட்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது தான் நான் சில கருத்துக்களை கூறினேன் என்றும் அந்த கருத்துக்களை பிரதானமாக வைத்து சில தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை குழப்பும் வகையில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமரட்ண தேரரிற்கு எதிராக நீதிமன்றில் இலங்கை காவல்துறை வழக்கினை தாக்கல் செய்துள்ளது.

விசாரணைகளின் தொடர்ச்சியாக சுமனரத்ன தேரரை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாமென்ற நிலையில் பொது மன்னிப்பினை சுமனரட்ண தேரர் கோரியுள்ளார்.


No comments