வாடகையே வேண்டாம்:வீடு வேண்டும்?

 


அரச ஆதரவு சிறிலங்கா சுதந்திர கட்சியிடம் இருந்து தனது வீட்டை மீட்டு தருமாறு வீட்டின் உரிமையாளர் இலங்கை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். 

யாழ்ப்பாணம் , சண்டிலிப்பாய் பகுதியில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் தொடர்பு அலுவலகம் ஒன்று அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இயங்கி வருகிறது. 

வீட்டில் இருந்து கட்சியினரை வெளியேறுமாறு தான் பல தடவைகள் கோரிய போதிலும், அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்கள் இல்லை , எனவே அவர்களை வெளியேற்றி உதவுமாறு காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார். 

ஏற்கனவே யாழ்.நகரிலுள்ள திரையரங்கொன்றை ஆக்கிரமித்துள்ளதாக மற்றொரு அரச ஆதரவு கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு முதல் கடந்த 27 வருடங்களாக தனது திரையரங்கை ஆக்கிரமித்துள்ளதாக புலம்பெயர் தமிழர் ஒருவர் முறையிட்டுவருகிறார்.

குறிப்பாக தனது திரையரங்கிற்கு வாடகையினை வழங்க கூட முன்வராதிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் மத்தியில் பல மில்லியன் மின்கட்டண நிலுவை தொடர்பிலும் முறையிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments