காணாமல் போன மீனவர் சடலமாக!
வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுபற்றித் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற தொழிலாளி படகின் இயந்திரத்தில் தூண்டிக் கயிறு சிக்கியுள்ளது. அதனை சீர்செய்ய முற்பட்ட போது கடலில் வீழ்ந்து காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளி தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் சுமார் 25க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடாத்தி, அவர் தொழிலில் ஈடுபட்ட இடத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் (நடுக்கடலில்) சடலத்தை கண்டுபிடித்து இன்று காலை 10 மணியளவில் கரை சேர்ந்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த விஜயகுமார் நிக்சன் (23) என்ற ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Post a Comment