பிரிக்கப்படவுள்ள வவுனியாவின் பிரிவுகள்!

 




வவுனியா மாவட்டத்தில் கிராமஅலுவலர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்ப்படுத்த எல்லை நிர்ணயகுழு பரிந்துரை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. 

அந்தவகையில் பிரதேசசெயலக வாரியாக பிரிக்க ப்படவுள்ள கிராமஅலுவலர் பிரிவுகளின் விபரம்.

வவுனியா பிரதேசசெயலகம்..

தோணிக்கல் கிராமஅலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (தோணிக்கல் வடக்கு/தெற்கு)

பண்டாரிக்குளம் மற்றும் கூமாங்குளம் ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகளை ஒன்றிணைத்து மூன்று கிராம அலுவலர் பிரிவுகள் உருவாக்குதல் (பண்டாரிக்குளம்,கூமாங்குளம்,உக்கிளாங்குளம்)

ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல்(ஆசிகுளம் கிழக்கு, ஆசிகுளம் மேற்கு)

மகாறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (மகாறம்பைக்குளம்கிழக்கு, மகாறம்பைக்குளம் மேற்கு)

பட்டாணிச்சூர் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் (வேப்பங்குளம், பட்டாணிச்சூர் புளியங்குளம்.

செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவு.

சூடுவெந்தபிலவு கிராம அலுவலர் பிரிவில் பாவற்குளம் யுனிட்-1 கிராமத்தை பாவற்குளம் யுனிட்-2 கிராம அலுவலர் பிரிவுடன் இணைத்தல்

கிறிஸ்தவகுளம் கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள அருவித்தோட்டம்,முசல்குத்தி ஆகிய கிராமங்களினை முகத்தான்குளம் கிராம அலுவலர் பிரிவுடன் இணைத்தல் 

ஆண்டியா புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவினை இரு கிராம அலுவலர் பிரிவுகளாக மாற்றுதல் ( ஆண்டியாபுளியங்குளம், மாணிக்கம்பண்ணை)

தெற்கு சிங்கள பிரதேச செயலகம்

பூமடுவ மற்றும் ஆவாரந்துலாவ கிராம அலுவலர் பிரிவுகளை ஒண்றிணைத்தல். 

றெக்7 மற்றும் ஏக்கர்400 கிராம அலுவலர் பிரிவுகளை ஒன்றிணைத்தல்

ஏக்கர் 20,40,60 மற்றும் பெரிய உலுக்குளம் கிராம அலுவலர் பிரிவுகளை ஒண்றிணைத்தல்.

No comments